பக்கம்:நீலா மாலா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32 வென்று முறிந்தது. முறிந்த மரம், குமாரசாமியின் தலையில் பட்டென்று விழுந்தது. பாவம், குமார சாமி ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர். ஆகுல், தம் உயிரை நெருப்புக்குக் கொடுத்து விட்டார்: குமாரசாமியின் மறைவுக்குப் பிறகு, மீனட்சி அம்மாளின் வாழ்வில் இருள் பரவியது. அவ ளுடைய தம்பி தங்கப்பன், குமாரசாமி விட்டுச் சென்ற வீடு, கிலம், தோட்டம் முதலியவற்றைக் கவனித்துக் கொள்வதற்காக வந்தான். அவன் கெட்டவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, பல வழிகளில் பணத்தைப் பாழாக்கினன். மீனுட்சி அம்மாள் பெயரைச் சொல்லிப் பலரிடம் கடன் வாங்கின்ை. கடைசியில் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, ஊரைவிட்டே ஓடிவிட்டான். . சொத்தெல்லாம் இழந்த பிறகு, ஊரின் கோடி யில் ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டு, நீலாவுடன் மீனுட்சி அம்மாள் வசித்து வந்தாள். எவருடைய தயவையும் அவள் எதிர்பார்க்கவில்லை. உழைத்துப் பிழைப்பது என்ற முடிவுக்கு வந்தாள். நீலாவை அவள் அப்பா ஆசைப்பட்டது போல், நன்ருகப் படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டுவந்து விட வேண்டும். அதுதான் என் ஆசையும் ' என்று அடிக்கடி சொல்லுவாள். அந்தக் கிராமத்தில் அவளுக்கு என்ன வேலை கிடைக்கும்? பரமசிவம் பிள்ளை வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாள். இரண்டு வேளைச் சாப்பாடும், இருபத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/34&oldid=1021585" இலிருந்து மீள்விக்கப்பட்டது