பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

என்று இளைய அக்காள் மங்கள நாயகி சொன்னாள். அது பிரமாதமான யோசனையென்று மூத்தவள் காந்தாரி எண்ணினாள். இரண்டு பேரும் பயறுகளைக் கட்டி வைத்துக் கொண்டார்கள். ஆனால், சந்திரிகா தன்னிடமிருந்த துணிமணிகளையும் வைரப் பெட்டியையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

அம் மூன்று பெண்களுக்காக மூன்று இளவரசர்கள் ஒரு துார தேசத்தில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர்களிடம் அழைத்துச் செல்வதாகவும் சிற்றன்னை அகங்காரவல்லபி பொய் சொன்னாள்.

காட்டுக்குள் வெகு துாரம் சென்ற பின் களைத்துப்போய் மூன்று பெண்களும் தூங்கும்போது அகங்கார வல்லபி அவர்களை அனாதைகளாக விட்டுவிட்டு ஓடி விட்டாள். அவர்கள் விழித்து எழுந்தபோது அவர்களைக் காட்டிலும் தன் காவல் தெய்வத்திடமே அதிக நம்பிக்கை வைத்திருந்த சந்திரிகா அழலானாள்.

"மூடப் பெண்ணே வாயை மூடு நாங்கள் வீடு செல்லும் வழியைக் கண்டு பிடிக்கிறோம். நாங்கள் கேட்கும்வரை நீ எதுவும் யோசனை சொல்ல வேண்டாம்” என்று அவளை காந்தாரி கோபித்துக் கொண்டாள்.

ஆனால் வழியில் போட்டு வந்த பயறுகளைக் காட்டுப் புறாக்கள் கொத்தித் தின்று விட்டபடியால், அவர்களால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. பெண்களும் துயரத்தோடு அழத் தாடங்கிவிட்டார்கள். அப்போது அவர்களுக்கு சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. ஆனால், ஒரு கொட்டையைக் கண்டார்கள் . அந்தக் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பை யார் சாப்பிடுவது என்று அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது!