பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

பார்த்த பிறகு தான் கேட்டது பொய்யல்ல என்று நன்றாகப் புரிந்து கொண்டான்.

விருந்தாளிகளின் கடுகடுப்புக்கும் பிச்சைக்காரர்களின் பழித் துாற்றலுக்கும் இடையே மனமிடிந்து துயரத்தோடு மன்னன் தன் அரண்மனை முற்றத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போது, வேகமாக வரும் குதிரையின் குளம்படிச் சத்தமும், வேட்டை நாய்கள் குரைக்கும் ஒசையும் வீதிப் புறத்திலே கேட்டது. மறு வினாடி பழைய கறுப்புச் சட்டைக்காரன் அரண்மனை முற்றத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் ஏறி வந்த குதிரையைத் தொடர்ந்து வேட்டை நாய்க் கூட்டமொன்று உள்ளே நுழைந்தது. அந்த கறுப்புச் சட்டைக்காரன், கையில் குறுந்தடியொன்று வைத்திருந்தான்.

“விரட்டுங்கள்! விரட்டுங்கள்!” என்று அவன் ஏவி விட்ட மாத்திரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பிச்சைக்காரர்களின் கூட்டத்திலும், விருந்தாளிகளிடையிலும் வேட்டை நாய்கள் புகுந்து கடித்தும் உறுமியும் நகத்தால் பிறாண்டியும், அவர்களை ஒட ஒட விரட்டியடித்தன. முற்றத்திலிருந்த கூட்டம் ழுவதும் கலைந்த பிறகு அவன் குதிரையை விட்டு அரசனருகில் வந்தான். "ஏழு தங்கப் பசு மன்னவரே!” நன்றி கெட்ட அவர்களை நான் விரட்டி விட்டேன்!” என்று சொன்னான்.

ஆனால் ஏழு தங்கப் பசு மன்னன், கறுப்புச் சட்டைக்காரனைக் கோபத்தோடு நோக்கினான். "என்னிடம் கொள்ளையடித்தவனிடமிருந்து நான் எவ்விதமான உதவியும் எதிர் பார்க்கவில்லை" என்று கூறினான்.

"அரசே! நான் உங்களிடமிருந்து திருடியது உண்மைதான்!!! ஆனால் எதற்காகத் திருடினேன்? நீங்கள் சீர்குலைகின்ற நேரத்தில் பயன்பட வேண்டும் என்பதற்காகவேதான்! ஐராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அழகான அரண்மனை தங்களை

நீ.மு. 4