பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது. அது தங்கள் அரண்மனை!” என்றான் கறுப்புச் சட்டைக்காரன்.

ஆகவே, ஏழு தங்கப் பசு மன்னன் ஆரவாரம் நிறைந்த பட்டணத்து அரண்மனையை விட்டு, அமைதி நிலவிய ஐராவதி ஆற்றங்கரையில் இருந்த அந்த அழகிய அரண்மனையில் போய் வாழ்ந்து வந்தான். முன்னைப் போலவே கறுப்புச் சட்டைக்காரன் அவனுக்குச் சம்பளமில்லாமல் வேலை பார்த்து வந்தான். அவ்வாறு எவ்விதமான மாறுபாடுமின்றி ஏழு ஆண்டுகள் அமைதியாகக் கழிந்தன.

ஏழாவது ஆண்டின் கடைசி நாளன்று ஏழு தங்கப் பசு மன்னன் கறுப்புச் சட்டைக்காரனைத் தன்னருகில் அழைத்தான். "என் வாழ்நாளிலேயே ராஜ விசுவாசமுள்ளவன் ஒரே ஒருவனைத்தான் கண்டிருக்கிறேன். அது நீதான்! நான் உனக்கு ஒரு பெரிய இரகசியத்தைக் கூறப் போகிறேன். அது என் காலத்திற்குப் பிறகு உனக்குப் பலனளிக்கும். ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், என் நண்பர்களென்று தருதிய நயவஞ்சகர்களுக்கு விருந்தளித்ததாலும் நன்றி கெட்ட பிச்சைக்காரர்களுக்குத் தருமம் செய்ததாலும் என் நிதிக்கிடங்கு காலியாகிப் பொன்னும் வெள்ளியும் எல்லாம் திர்ந்து விட்டன அல்லவா? அப்போது நான் நினைத்திருந்தால், அந்த நிதிப் பெட்டகம் முழுவதையும் திரும்பவும் நிறைய வைத்திருப்பேன். ஆனால் நான் அப்போது இதைச் செய்யவில்லை. அப்படிச் செய்யாததினால் தன், உன்னைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் எவ்வளவு நன்றி விசுவாசமற்றவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது எனக்கு முதுமை ஏறிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் நான் இறந்து விடுவேன் என்று தோன்றுகிறது. ஆகையால் என் ஒரே நண்பனான உன்னையே என் சொத்துக்களுக்கு வாரிசாக்கி விட்டுப் போக எண்ணுகிறேன். ஆகவே எங்கள் குடும்பத்தின் அழியாச் செல்வமாகிய இந்த