பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

வயிறுமாகக் கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு வந்தார்கள். வயிற்றுக்கே உணவு போதாதபோது அவர்கள் வாடகை எப்படிக் கொடுக்க முடியும்? ஆகவே அவர்கள் அந்த ஆண்டு முடிவில் அரக்கனுடைய வருகையை அச்சத்தோடும், பீதியோடும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வழக்கமாக அரக்கன் பெருந்தலைப் பிரசண்டன் வாடகை வசூல் பண்ண வருகின்ற மாதம் நெருங்கிய உடன், அவன் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும்படி தன் ஏழு குழந்தைகளையும் ஒரு நாளைக்கொருவர் தம் மலைப் பாதைப் பக்கம் காவல் வைத்திருந்தான் சமயோசிதம். ஒரு நாள் மாலை சமயோசிதமும் அவன் மனைவி மக்களும் அப்போதுதான் காய்ச்சி வைத்திருந்த கஞ்சியைக் குடித்து முடிந்திருந்தார்கள். அன்று காவல்