பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

அது?’ என்று சத்தம் போட்டான். உடனே, பீதியை அடக்கமாட்டாமல் சமயோசிதம் "ஊய்" என்று கூச்சலிட்டு விட்டான். அப்போது அவன் போர்த்தியிருந்த மாட்டுத் தோல் நழுவி க் கிழே திருடர்களின் மேல் விழுந்தது “ஊய்” என்ற பயங்கரமான சத்தத்தையும் இரண்டு கொம்புடன் கறுப்பாகத் தங்கள் மேல் விழுந்த அந்த கரிய பொருளையும் கண்ட திருடர்கள் ஏதோ பூதம்தான் தங்களை அமுக்க வருகிறதென்று எண்ணிப் பயந்து, அலறியடித்துக் கொண்டு தாங்கள் கொள்ளையடித்துக் கொண்டு வந்த பொருளை விட்டு விட்டு அங்கிருந்து பாய்ந்தோடினார்கள்.

அவர்கள் போய் நெடு நேரத்திற்குப் பிறகு ஒருவாறு பயம் தெளிந்து சமயோசிதம் கிழே இறங்கி வந்தான். கிழே கொட்டிக் கிடந்த தங்க நாணயங்களை யெல்லாம் சாக்குப் பைகளில் அள்ளிப் போட்டு நிரப்பினான். பிறகு அவற்றை மாட்டுத் தோலில் வைத்து மூட்டையாகக் கட்டி அதை கொண்டு தன் வீட்டுக்குப் பேர்னான். கவும் கனமாக இருந்த அதைப் பெரும் பாடுபட்டு இழுத்துச் சென்று வீட்டில் சேர்த்தவுடன், தன் மனைவியை எழுப்பித் தங்க நாயனங்களைத் தன்னுடன் கூட இருந்து எண்ணும்படிச் சொன்னான். மறுநாள் பகல் வரையிலே அவர்கள் உட்கார்ந்து எண்ணியும் தங்க நாணயங்களில் பாதியளவு கூட எண்ணி முடிக்கவில்லை.

“நம்மிடம் படியிருந்தால் எளிதாக அளந்து இத்தனை படியென்று கணக்குச் செய்து விடலாம்” என்று தோட்டக்காரன் மனைவி சொன்னாள்.

"அந்த அரக்கனிடம் அளவுப்படி நிச்சயம் இருக்கும். அவனுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் இருந்தும் அவன் நம்மை வாடகை கொடு என்று சொல்லி வாட்டி வதைக்கிறான்.” என்று சொல்லிக் கொண்டிருந்த சமயோசிதத்துக்குத் திடீர்