பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

85



வாழ்ந்தால் போதும். நாணயமான உன் வயிற்றுப் பிழைப்புக்கு நான் வழிகாட்டு றேன்... நானும் என் த வற்றை சில மணிநேரத்திலே ருந்துதான் புரிஞ்சு உணர்ந்துக்கிட்டேன். ஊர்வசியைப் பத்தி உனக்கிட்டே நான் சொல்லிவிட்டேன். அந்த ஊர்வசிதான் என்னோட இந்த மாறுதலுக்கு வித்திட்ட புண்ணியவதி. உன் கிட்ட நான் மன்னிப்பு வாங்கிக்க வேணும். சோதனை இல்லாட்டா, வாழ்க்கையே சுவையற்றுப் போயிடும்போல!... நீ திடமாயிரு. அப்பத்தான் எனக்கும் தெம்பாயிருக்கும். நான் அடிக்கடி வந்து உன்னைக் கவனிச்சுக்கிடுவேன். போய் வரட்டுமா?" ஒளிவெள்ளம் வழிந்தது. அவள் அன்பின் விழிகளை மலர்த்தி, "போயிட்டு வாங்க சார்!" என்று வலது கையை அசைத்தாள். வெளுத்துப்போயிருந்த கவர்ச்சிமிகுந்த அவளது முகத்தில் புன்னகைக் கீற்று வெடித்தது; அவளது குவளைக் கண்கள் நீர்ப் பீலியாயின. அம்பலத்தரசன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு புறப்படலானான். - சந்த டிமிகுந்த தங்கசாலை பின்தங்கியது. ஒளியும் நிழலும் கலந்த இயற்கையின் செயற்கைக் கோலத்தை ரசித்தவனாக, அடிவைத்து அடிபிரித்து நடந்த அம்பலத்தரசன், ஸ்டான்லி'யை நெருங்கிய தருணத்தில் ஆஸ்பத்திரிக்குரிய வாடையையும் நெடியையும் அனுபவித்து நடந்தான். அப்போது அவன் பார்வையில் காட்சியொன்று ஏடுவிரிந்தது. தான் சன்ற குட்டிகளைப் பாசம் பொங்கப் பார்த்து அவற்றை ஒவ்வொன்றாகப் பாசத்தோடு நக்கிக் கொண்டிருந்தது தாய்நாய் ஒன்று. - + - - - இக்காட்சியை இமை வலிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அப்போது அவன் மனம் தாய் நாய் இருக்கிறது. ஆனால் தந்தை நாய் எங்கே?" என்று ஒரு கேள்வியை வீசியது; அவன் சுற்றிச் சூழ நோக்கினான். தாய்மட்டும்தான் தட்டுப்பட்டது!... அவன் தடுமாறிக்கொண்டே நடையைத் தொடர்ந்தான், ஊர்வசியின் நினைவுடன். அவன் மனமும் தொடர்ந்தது.