பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பூவை எஸ். ஆறுமுகம்



விதிவசத்தால் தன் வயிற்றில் கரு வளரும் நிலை ஏற்பட்டால், அந்த ஒரு முடிவுக்குக் குறுக்கே தான் என்றென்றும் நிற்கக் கூடாது என்று தனக்கு ஆணை இட்டிருந்த ஊர்வசியின் கடிதத்தின் இதயம் இப்போதும் அவனைத் தொட்டது. உணர்வு கலங்க, உள்ளம் கலங்க அவன் ஒரு வினாடி அப்படியே சிலையாக நின்றான். மீண்டும் ஊர்வசியைச் சூழ்ந்தது அவன் மனம், "ஊர்வசியை பலவந்தமாகக் கெடுத்த அந்தப் பாவி யாராக இருக்கும் ... என்னிடம் மட்டுமல்லாமல், அவள் தாயிடமும் அவள் அந்தப் பாவியின் பெயரை ஏன் சொல்ல மறுத்துவிட்டாள்? இதில் சஸ்பென்ஸ் என்ன இருக்க முடியும்? பாவி, அவன்!... அந்தத் துரோகியை மட்டும் நான் அறிய முடிந்தால், அவனை ஊர்வசிக்கு முந்திக் கொண்டு பழிவாங்கிவிடுவேனே!... தன் ஆத்திரம் முழுவதையும் சுழலாக்கித் தன் நெஞ்சக் கடலிலே மறைத்து வைத்திருக்கிறாள் ஊர்வசி! அவள் மனம் எனக்குப் புரிகிறது; அவள் வேதனையை நானும் அனுபவிக்கிறேன். சுழல் என்றைக்கு அந்தப் பாவியைச் சிக்கவைக்கப் போகிறதோ, தெரியவில்லை!... அம்பலத்தரசன் இப்போது தன்னைப் பற்றியும் ஊர்வசியைப் பற்றியும் மங்கையர்க்கரசியைப் பற்றியும் நீதிதேவன் இருப்பிடத்தில் அமர்ந்து எண்ணிப்பார்த்தான். ஊர்வசி மட்டுமே நிரபராதியாக அவனுள் தோற்றம் கொடுத்ததை அவனது உள்ளுணர்வு எடுத்துக்காட்டியது. வாழ்க்கை ஒர் உயிர் மரணப் போராட்டமேதான்!... பிறவிச் சோதனையை வெல்ல, தியாகப் பண்பும் சுயநலமற்ற தன்மையும் ஈரச்சித்தமும் வேண்டும். இத்தகைய குணச்சீர்கள் மனித மனத்துக்குக் கிட்டிவிட்டால், அப்பால், வாழ்க்கை ஒர் ஆனந்தமயமான ஆறுதலாகவே அமையும். ஊர்வசியின் எதிர்காலத்தைப் பேண நான் எடுத்துள்ள இப்புதுப் பிறவி எனக்குக் கை கொடுக்கும்; என் மனமே எனக்கு வழிகாட்டியாக அமையும். என் மனத்துக்கு நானும் வழிகாட்டியாக அமையமுடியும் அவன் போர்த்துக்கீசிய மாதாகோயில் தெருவில் திரும்பினான். ‘. . . . . . . . .,, எனக்குக் கோழி பிரியாணி பிடிக்குமென்று யார் யிருப்பார்கள் ஊர்வசி யிடம்?... ஆமாம்,