பக்கம்:நூறாசிரியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

நூறாசிரியம்

இழிவுரைகளே! கிளியைக் கோட்டானென்றும், மானை மந்தி யென்றும் உரைத்த போலியுரைகளே!

எனவே பெரியார் மறுத்துரைக்கும் கடவுட் கொள்கை என்பது சமயக் குரவர்கள் என்னும் கற்பனைக் கலைஞர்கள் படைத்த கட்டுரைகளையே என்றும், உண்மையான இறைமையினை எவரும் மறுத்தற்கியலாதென்றும், அவ்வாறு மறுப்பாரின் உரை, தீயைக் காற்றென்றும், காற்றைக் கனப்பென்றும் கூறுதல் போலும் குறட்டுரைகளே என்றும், அவ்வாறு கூறுவார் உலகில் ஒருவரும் இலர் என்றும், குழந்தைக்கும், குமரனுக்கும் தந்தைக்கும், தாய்க்கும் புலப்படும் அன்பு பல்வேறு நிலைகளை உடையதெனினும், அவற்றை இல்லை யென்று மறுப்பார் எவருமிலாது போலவும், ஒருவருக்கு மிகச்சுடும் வெந்நீர், பிறிதொருவர்க்கு மிகக் குறைவாகச் சுட்டாலும் அதனைக் குளிர்நீர் என்று கூறுவார் எவருமிலாது போலவும், இறைமை பல்வேறு உயிர்களால் பலவகையில் அறிந்து கொள்ளப் பெற்றாலும் அத்தன்மையினை இல்லை என்று மறுப்பார் எவருமிலர் என்றும் தெளிந்து கொள்க.

இனி, “தீய நினைவுகளாலும், தந்நலப் பற்றுகளாலும் கலக்கமுற்றுக் கற்பனை நிறைந்த நிலையில் தோன்றியது கடவுட் கொள்கையாகவின் அதை மறுத்தார் என்றபடி" என்னும் முற்கூறிய அடியினுள் வரும், தீய நினைவுகள் தந்நலப்பற்று கற்பனை- முதலிய சொற்கள் எவற்றைக் குறிப்பன என்பதற்கும், அவை இறைமை ஆகாவோ என்பதற்கும் விடையென்னெனின் கூறுதும். -

தீயநினைவும், தந்நலப்பற்றும், கற்பனையும் இறைமையே! ஒன்றுக்குத் தீது பிறிதொன்றுக்கு நன்றாயும், ஒன்றுக்குத் தன்னலம் பிறிதொன்றுக்குப் பிறநலமாயும், ஒன்றின் கற்பனை பிறிதொன்றின் நிகழ்பாடாயும் இருத்தல் கண்கூடு. (மாந்தன் பறப்பது போலும் செய்யும் கற்பனை, பறவைக்கு நிகழ்பாடாயிருத்தல் காண்க) உலகியல் இயங்கும் பல்லாயிரங்கோடி உயிர்களுள் மாந்த உயிரினத்திற்கு என மாந்த இனம் வகுத்துக் கொண்டவையே அதற்கு நன்மையென்றும், தீமையென்றும் பெயர் பெறுவன. இவை ஓர் எல்லையுட்பட்டன. பெண்டிர் யாவரும் ஒருவர் போல்வரே என்னும் இயற்கூறுபாட்டில், மாந்தன் அவரைத் தாயென்றும், மனையென்றும், தங்கையென்றும் வகுத்துக் கொண்டது போல்வதே எல்லை என்க. அவ்வெல்லை கடந்தோமெனின் நம் நன்மை இன்னொன்றால் தீமை என்று பெயர் சூட்டப்பெறுவதையும், நம் தீமை இன்னொன்றால் நன்மை எனப் பெயர் சுட்டிச் சொல்லப் பெறுவதையும் நாம் உணரலாம். அக்கால் நாம் கொண்ட நமக்குகந்த தன்மைகள் மாறுபட்டுப் போவுதைப் பார்க்கலாம். அந்நிலையில் அவை இறைமையில்லை என்று சொல்லப் பெறுமா?

மாந்தநிலையில் உணவு எரிக்கப்பட்டுச் செந்நீர் உறிஞ்சப் பெற்றால் எஞ்சிய கரி மலம் என்று சுட்டப்பெறும் கழிவென்றும் இழிவென்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/146&oldid=1220811" இலிருந்து மீள்விக்கப்பட்டது