பக்கம்:நூறாசிரியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

129

உளம் வீழ்த்தாவே - உள்ளங்களை ஈர்த்து உன் அடிகளில் வீழ்த்த மாட்டா.

பெண்மைக் கிழிவான நின் செயல்களால் கவர்ச்சியுறுவோர் ஆண்மை நிறைந்தவர் ஆகார் நின் இழிந்த தோற்றத்தால் அவர்தம் ஆண்மையில் தோல்வியுற்று நிற்றலால் நீயே வென்றவளாகின்றனை. ஆனால் உண்மையான பெண்மையைச் சிலர் வெற்றி கொள்வதால், அவரே உண்மையான ஆண்மை மிக்கவராகவும் வென்றவராகவும் ஆகின்றார். எனவே அத்தகையோரே வென் ஆடவர் எனக் கூறத்தக்கவராவார்.

பெண் தனக்கியல்பாகிய நாணத்தையும் அச்சத்தையும் துறந்த விடத்தும் ஆடவரில் சிலர் அல்லது பலர் அவளை விரும்புவராயினும், அத்தகையோர் நல்லாண்மை அற்றவர் என்றே சான்றோரால் கருதப் பெறுவர் என்க. அவ்விழிந்த மன நெகிழ்ச்சியுடையவர் அவளைத் தொடர்ந்து விரும்புவதற்கும் பேணுதற்கும் இயலாது, மேலும் மேலும் அத்தன்மை வாய்ந்த புதுப்புதுப் பெண்டிரையே விரும்பி நுகரத் தலைப்படுவர். ஆகையால் அவர் நிறைந்த ஆண்மை உடையவராகக் கருதப்படுவதிலர். என்னை? நிறையுடைமை கட்டழிந்து போயின் வல்லாண்மை பெறுவதெங்ஙன்? பிறன் மனை நோக்காத தன்மையே பேராண்மை - என்று கூறப்பெறுவதையும் காண்க.

உடல் உறுப்புகள் வெளிப்படுமாறு ஆடை உடுத்தும் பெண்மையின் இழிவுத் தன்மையை நீக்குமாறும், ஆடவரை அத்தன்மையால் கவர்தல் அவர்க்குத் கருத்தாதலின் அவ்வுறுப்புகளை வெளிக்குக் காட்டாவாறு மறைத்தலே மனவியல்படியும் அறவியல் படியும் பொருந்துவதாம் என்றும், அவ்வாறின்றி அகப்புறப் படுத்தும் ஆடை உடுப்பதால் விளையும் கவர்ச்சிக்கு நல்லாண்மை சான்றவர் மயங்கார் ஆதலின் அத்தன்மை வாய்ந்த பெண்டிர்க்கு ஆண்மைக் குறைவுடைய ஆடவரே துணைவர்களாய் வாய்த்துவிடுவர் என்றும், தானமும், புரையிலா நெஞ்சும், தவறு சாரா வொழுங்கும் அச்சம் நிறைந்த காவலும், இழிவு தோயாத உரையுமே நிறைந்த பெண்மைக்குக் காப்பும் அழகும் என்றும், இத்தகைய நிறை பெண்மைக் குனங்களாலேயே ஆண்மை மிக்கவோர் ஆடவனைத் துணையாகத் தேர முடியும் என்றும், அவ்வாறு தேரும் பெண்ணும் தேரப் பெற்ற ஆணும் போன்றவர்களாலேயே இவ்வுலகம் நிறைந்த பயனெய்த முடியும் என்றும் அறிவுறுத்துவது இப் பாட்டாம் என்க.

இது புறத் தினையும், முதுமொழிக்காஞ்சி என்னும் துறையுமாகும்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/155&oldid=1220835" இலிருந்து மீள்விக்கப்பட்டது