பக்கம்:நூறாசிரியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

நூறாசிரியம்




27 பெறும் பெற்றி


நிலமுது கொருபுறம் நீடிய நிழலும்
பலகதி ரோடிய பகலும் போல
உளவோர் உண்மையும் இலவோர் இன்மையும்
அளவுவரைத் தன்றே! ஆயிரு மருங்கும்
நின்று நீளுதல் நீணிலத் தின்றே! 5
குன்றன்ன கொடிநிறுத்தித்
தின்றுய்யத் திருவாழினும்
ஒன்றிலார்க் கொன்றுவந் துதவல்
பின்றைத் தாம்பெறும் பெற்றியா மாறே!

பொழிப்பு:

நிலக்கோளத்தின் வளைந்த புறமுதுகின் ஒரு புறத்தே முன்னோக்கி நீண்டு கொண்டே போகின்ற நிழலாகிய இருளும், மற்றொரு புறத்தே பல்கோடிக் கதிர்க் கற்றைகளால் விளைந்து முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கின்ற பகலொளியும் போல், இவ்வுலகின்கண் பொருள் உள்ளவரின் உளவாந் தன்மையும், அஃதில்லவரின் இலவாந் தன்மையும் எல்லை நிலைப்புடையன அல்ல. அவ்விருபுறத்தும் ஒரு பொழுதில் நின்ற நிலையே தொடர்ந்து நீடிக்கப் பெறுதல் இவ்வகன்ற நிலத்தின்கண் யாண்டும் இல்லை. குன்றின் உயர்ச்சியளவாகத் தம் இலச்சினைக் கொடியை நிறுத்தி, அதன் பரும அளவாகத் தாமும் தம் பிறங்கடையரும் தின்று உய்யும்படி தமக்குச் செல்வவளம் வாய்ந்திருப்பினும், அந்நிலைகளில் ஒன்றுதானும் அடைந்திலார்க்கு வேண்டுவதாகிய ஒரு பொருளைத் தம் உள்ளம் உவக்குமாறு உதவுதலே, தமக்குப் பொருந்திய வளம் குன்றிய காலத்துத் தாம் துய்ப்பதற்குரிய வாய்ப்பு உருவாகும் வழியாம்!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

உலக வுருண்டையைச் சுற்றிச் சுழல்கின்ற இரவும் பகலும் போல் மக்கட்கு வந்து வாய்க்கும் செல்வ நிலையும் வறுமை நிலையும் வரையறுக்கப் பட்டன வல்ல. இரு நிலைகளும் ஒரு நிலையிலேயே நிற்றல் மாறாச் சுழற்சியுடைய நிலத்தின்கண் யாண்டும் நடை பெறுதல் இல்லை. குன்றுபோல் குவிந்த செல்வம் உடையவரும் பிற்காலத்து அதைத் தவறாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/156&oldid=1220838" இலிருந்து மீள்விக்கப்பட்டது