பக்கம்:நூறாசிரியம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

நூறாசிரியம்



38 உட்புலன் முனைப்பே!


பிரிவுறு மகனே! பிரிவுறு மகனே!
அறிவமை கழகத் தன்றன் றாயும்
நெறிமுறை பயிலப் பிரிவுறு மகனே!
எறிதிரை முந்நீர் இழைந்ததர் தப்பிய
கலங்கரைந் துய்க்கும் கதிர்சுழல் விளக்கம் 5
சேண்தடவு மாடச் சென்னையம் பதியின்
ஒவத் தெருவும், கோவினைக் கோட்டமும்
நெறிதரு மன்றும் திரிதரு மக்களும்
கான்படு விலங்கின் காட்சியும் அவ்வினத்
தூன்படு பொய்யுடல் உயிர்பெறு வியப்பும் 10
அருந்தற் பொருள்களும் மருந்தின் மனைகளும்
திருந்தா உள்ளம் திசைதிசை வீழ்த்தும்
ஒளிநடக் காட்சியும் ஒலியின் ஒக்கமும்
களிகொள் ஒதுக்கமும் கவிஆ வணமும்
விலைகூய்ப் புணர்ந்து நோய்பல வித்தும் 15
பொலிவுடல் தோற்றத்துப் போலி மகளிரும்
புறம்புனை மயக்கின் புரைநரி கரிகத்
தறம்பிறழ் வினைகளும் அலவே சிறந்தன!
இசைபெறு கல்வியின் ஏர்ந்தன் றொழுங்கே!
வசைபெறு வாழ்வின் மாய்கை நன்றே! 20
தசைபெற லன்றே வாழ்க்கை! தசையுடன்
அறிவும் உணர்வும் அவையினு முண்மையும்
செறியுநல் லுயிர்க்குச் சிறப்பென் றாரே!
உண்கையு முடுக்கையு முறுபொருள் பெறுகையுங்
கற்ற வன்றே கல்வி 25
முட்டறப் பொருந்திய உட்புலன் முனைப்பே!

பொழிப்பு:

பிரிந்து செல்லும் மகனே! பிரிந்து செல்லும் மகனே! அறிவு நிறைந்த கல்விக் கமகத்தே அன்றன்று புதுவதாக ஆராய்ந்து அறிகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/202&oldid=1208912" இலிருந்து மீள்விக்கப்பட்டது