பக்கம்:நூறாசிரியம்.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

181

ஒளிநடக் காட்சி - ஒளியுருவம் அசைகின்ற காட்சி- திரைப்படக் காட்சிகள்.

ஒலியின் ஒக்கம் - ஒலியின் பெருக்கம்- ஆரவார ஒலி,

களிகொள் ஒதுக்கம் - களிப்பு நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒதுக்குப் புறங்கள். நகர்ப்புறங்கள் கட்டிடங்களாலும் போக்குவரத்துகளாலும் நெரிசல்கள் மிகுந்து நிற்குமாகலின், பொழுது போக்குக்காக நடத்தப்பெறும் களிப்பு நிகழ்ச்சிகளைக் கொண்ட கொட்டகைகளும், கூடாரங்களும் ஒதுக்கமாயுள்ள வெற்று வெளிகளில் அமைக்கப் பெறுவதால், அவை ‘களிகொள் ஒதுக்கம்' ஆயிற்று.

கலி ஆவணம்- ஆரவாரமிக்க கடைத்தெரு.

கலித்தல் - நிறைதல், மிகுதல், தழைத்தல், கல்-ஓசையைக் குறிக்கும் ஒர் ஒப்பொலிச் சொல். அதனின்று கலிங் கலிங், கலகல முதலிய பல ஒசைச் சொற்கள் பிறக்கும். ஒர் ஒழுங்கின்றிக் கலப்பு மிகுந்த ஒர் ஒலித்தொகுதியைக் குறிக்கின்ற பொழுது, கலி என்று மட்டில் நின்று பொருள் தரும்.

ஆவணம் - நுகர்ச்சிப் பொருள்கள் நிறைந்த இடவரிசை என்று பொருள்தரும் சொல். ஆ - நுகர் பொருள். அணம் வரிசைப் பொருள் தரும் ஒரு பெயர்ச் சொல்லீறு. பொட்டணம், கட்டணம் என்பவற்றில் நோக்குக. வரிசை- முறை-ஒழுங்கு- ஒரு பொருள் பல சொற்கள்.

விலைகூய்ப்...... போலி மகளிர்- கூய், புணர்ந்து, வித்தும், என்னும் எச்ச வினைச்சொற்கள் போலி மகளிரைச் சார்வதால், அவரின் வினையாளுமை உணர்தல் பாலது. பொலிவுடல் அழகுமிக்க உடல், இனி, புணர்ச்சிக்கே உரிய உடல் என்றும் பொருள்படும். பொலிவு- புணர்ச்சி. மகளிர் என்னுஞ் சொல் பொதுவில் சிறந்த பெண்டிரைக் குறித்தாலும், சிறப்பில் மணமாகிய பெண்டிரையே மனைவியரையே- குறிக்கும் உயர்ந்த சொல். போலி மகளிர் என்னுமிடத்து, மனைவியர்போல் உரிமையாட்டுக்குரிய பெண்டிர் என்றும் சிறப்புப் பொருள் தரும்.

புறம் புனை...... புரை நாகரிகம் - வெளிப்புறப் பார்வைக்குச் சிறப்பாகவும் மயக்கந் தருமாறும் விளங்கி உள்ளே பயன் ஒன்றுமில்லாத நாகரிகம். புரை-உள்ளீடற்ற தொளை.

நாகரிகம்- நகர வொழுக்கம் புற நடை மாறுபாடு.

அறம் பிறழ் வினைகள் - நெறிமுறைகள் மாறுபட்ட செயல்கள்.

அறம் - ஆறு (வகுமுறை, நெறிமுறை, ஒழுக்க முறை) என்னும் அடியாகப் பிறந்த சொல். அகத்தானும் புறத்தானும் சான்றோர்களால் வகுக்கப்பெற்ற ஒழுகலாறு. கடைப்பிடி