பக்கம்:நூறாசிரியம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
43. எழிலிருந்த வாறே

மெய்யெனக் கொள்ளினுங் கொள்ளுக; பேதை
வெய்தீர் முயக்கென் றிகழினும் இகழ்க;
எதிர்ப்படு ஞான்றும் விழிமுகங் கவிழ்ந்த;
வதிந்த காலும் நானுறக் குனிந்த;
இனைத்துங் காண்டிலை அம்ம, ஏர்ந்தே 5
பணையார்ந்த நெடுந்தோள் பதிய
எனையூர்ந்த காளைக்கு எழிலிருந்த வாறே!

பொழிப்பு:

உண்மையென்று கருதிக் கொண்டாலும் கொள்ளுக ; அல்லது (பொய் என்று கருதிக் கொண்டாலும் கொள்ளுக;)

பேதைப் பெண்ணாகிய எனது உடல் வெப்பம் தீரும்படியாக (அவனுடன் நினைவின்றி முயங்கிக் கிடந்த) முயக்கம் என்று கருதி இகழ்ந்தாலும் இகழ்க, அவனை நேருக்கு நேராக எதிரில் கண்டு காதலித்த பொழுதும் நாணத்தால் விழிகளும் முகமும் கவிழ்ந்து கொண்டன. அவனுடன் மனங்கொண்டு வாழ்கின்ற இப்பொழுதும் அதே நாணம் மேலுற அவை குனிந்து கொள்ளுகின்றன. எனவாக, இன்றுங்கூட, நான் கண்டில்லை. அம்ம, உயர்ந்து பருத்த அழகிய நெடிய தோள்கள் என் மார்பில் பதியும்படி) என்னைப் புணர்கின்ற காளை போலும் என் தலைவற்கு எழில் இருந்த அவ்வகையினை.

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

‘நின் தலைவனது எழில் நலம் எவ்வாறு’ என்று நொதுமல் தோழி

யொருத்தி, கற்பு காலத்துத் தலைவியிடம் வினாவுகின்றாள். அவட்குத் தலைவி இவ்வாறு விடை கூறுகின்றாள் என்பதாகும் இப்பாட்டு.

‘அவன் அழகு நலன் முழுமையாக எவ்வாறிருக்கும் என்பதை, அவனொடுமணம் பொருந்தி இல்லறம் மேவிய எனக்கு இன்று வரையிலும் கூடத் தெரியாது. முன்பு அவனைக் காதலித்துக் களவொழுக்கம் கொண்டிருந்த காலை, அவனை நெருங்கிய பொழுதெல்லாம் அவன் அழகை முழுமையாகப் பார்த்துச் சுவைக்க முடியாதவாறு என் விழிகளும

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/227&oldid=1209034" இலிருந்து மீள்விக்கப்பட்டது