பக்கம்:நூறாசிரியம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

நூறாசிரியம்

காவலர்கள் பேர். சுடப்பட்டு இறந்த 68 பேரில் குமாரபாளையத்தில் 15பேர்; பொள்ளாச்சியில் 10 பேர்; புதுச்சேரியில் 10 பேர்.

1965ஆம் ஆண்டில் நடந்த இந்திப்போரில், மாணவர் அடர்ந்தெழுந்த உணர்வெழுச்சியைக் குறித்தது; இப்பாடல். அக்கால், தமிழகத்து, இனங்காக்கவும் மொழி பேணவும் நின்ற கட்சிகள் பலவிருந்தும், தலைவர் பலரிருந்தும் அவற்றுள் ஒன்றினாலும் அவருள் ஒருவராலும் தூண்டப் பெறாமல், தமிழ் காத்தற்குத் தாமே எழுச்சியுற்று வீறுகொள நின்ற உயர்பள்ளி, கல்லூரி மாணவர்தம் வலிந்த போக்கை வரலாறு படுத்துவதாகும் இப்பாடல். இனி, இது தொடர்ந்து வரும் பன்னிரு பாடல்களும் இத்தகையினவே.

இது, செந்தமிழ்த் தும்பை என் திணையும் புன்மொழி பொருதல் என் துறையுமாம் என்க. திணை, துறை புனைந்த புதியன.

செந்தமிழ்க்கெனப் பொருத வெழுந்தது ‘செந்தமிழ்த்தும்பை'யும் தமிழ் மீதுர்ந்து அழிக்க வந்த இந்தியென் புன்மொழி நோக்கிப் பொருதி நின்றது ‘புன்மொழி பொருதலு'ம் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/270&oldid=1221126" இலிருந்து மீள்விக்கப்பட்டது