பக்கம்:நூறாசிரியம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

5


முன்னுதல் - மூண்டு நிற்றல் முன் பகுதி. முள்ளல் - முண்ணுதல் முன்னுதல்.

உணர்தல் - உள்ளறிதல், அறிதல் புறமும், உணர்தல் அகமும் என்று உணர்க.

அறிதல் - மூளையின்பாற்படுவது. உணர்தல் - உள்ளத்தின் பாற்படுவது.

உணர்வினார்க்கல்லதை - உள்நின்று அறியும் தகவினார்க்கன்றி:

வகுத்த அறிவும் வழக்கும் - வகுக்கப்பெற்ற அறிவுத் துறைகளால் பெற்ற ஈட்டமும், அவை ஒன்றுக்கு ஒன்று பொருந்துவதாகிய வழக்கும். என்னை? பூதநிலை பற்றி ஆயும் வேதியலும் பொருள்நிலைபற்றி ஆயும் விளங்கியலும் மாறுபடாவழி மண்ணியலொடும், விண்ணியலொடும் பொருத்திப் பார்க்கும் ஏரண வழக்கு.

கூடி - அவ்வத்துறையோகிய அறிவினார் பலருங்கூடி ஒன்றுபட்டு.

பகுத்தாய்தல் - பூதநிலைகளையும் பொருள் நிலைகளையும் பாகுபாடு செய்து இயக்க இருப்பை அறிதல்.

தொகுத்தவை - அப்பகுப்பில் விளங்காது. தொகுப்பில் விளங்கா நிற்கும் கருப்பொருள் உண்மைகள்.

விளங்கா - விளக்கமுறத்தோன்றா. அறியப்படமாட்டா.

உள்ளதன்நாள் - உயிர் மெய்யொடு பொருந்தி உளவாகிய இயக்க எல்லை. வாணாள்.

உன்னி - அழுந்தி.

உணர்மின் - உள்ளறிமின்.

தெள்ள - கசடு அடித்தங்கி அறிவு தேங்கி நிற்குமாறு.

உணர்ந்து அவன் தேர்ந்து - உள்நின்று நோக்கி அறிந்து அவனாகிய மெய்ப்பொருளே மூலகாரணன் என உட்கொண்டு.

தெளிமின் - தெளிதற்கு முனைமின்,

கொள்ளுமின் ஆங்கவன் கொடை - அன்றே நம்மையும் நமக்காக ஐம்புலக் கருவிகளையும், அவை மேயும் உடலையும், அஃது ஊர்ந்த உயிரையும்.அஃது உலவ உலகங்களையும் நாம் விழையாக்காலத்தே நமக்கு ஈகமாகத் தரப்பெற்ற அருளை,

கொண்டு கொடுமின் - கொள்ளுதற்போலும் கொடுமின்கள். அளவிடப்பெறாத செல்வங்களையும் அவற்றைத்துய்க்க அளவிடப்பெறாத அறிவுணர்வையும் கேளாமலே கொடுத்த கொடையைப் பெற்றதுபோல்