பக்கம்:நூறாசிரியம்.pdf/317

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

291

மருந்தில்லாவிடினும், அவர்களைக் கொன்றழிக்கும் மருந்தையாகிலும் அறிவையோ என்று அசைக்கும் பொருள்கொண்டு உரைக்கலாம் என்க.

கன்றிய நெஞ்சோர்-மேற்கூறிய நால்வகை மக்கள் என்னுந் தோற்றத்துத் திரிபுள்ளம் கொண்டவர்களைக் கண்டு கொண்டு நொந்து கசிந்துபோன உள்ளமுடையவர்கள்.

களிப்புற உரைமே - மகிழ்வுறும்படி கூறுவாயாக

பொதுவான நல்ல மாந்தர்களுக்குரிய வகையில் நோய்ப்படாத உறுப்புகளைக் கொண்டிருப்பினும், நஞ்சுள்ளம் உடையவர்களாக இனிய உரைகளைப் பேசுபவர்களையும், தீயனவற்றை அஞ்சாமல் செய்பவர்களையும், நன்மை செய்தார்க்கும் தீங்கு செய்யும் நன்றியற்றவர்களையும், நல்லவர்கள் போல் நடக்கும் போலி மாந்தர்களையும். திருத்துவதற்கு ஏதேனும் மருந்து உண்டோ, தீராமல் கைவிடப்பட்ட நோயாளர்களையும் மிக்கக் கருத்துடன் கவனித்து அவர்களின் நோய்களைத் தீர்க்கின்ற மருத்துவனே அவ்வாறு மருந்து உளதாயின், அந்த மாந்தத் திரிபுள்ளவர்களுக்கு அதனைக் கொடுத்து அவர்களைத் திருத்தி, அவர்களைக் கண்டு உள்ளம் வருந்துகின்றவர்கள் மகிழுமாறு, அவர்களை நல்லவர்களாகச் செய்வாயாக என்றபடி,

இப்பாடல் பொதுவியல் என்னும் திணையும், முதுமொழிக் காஞ்சி என்னும்துறையும் என்க.