290
நூறாசிரியம்
நோயாளர்களையும் குணப்படுத்துகின்ற திறன்வாய்ந்த மருத்துவரிடம், மேற்கண்டாரைக் குணப்படுத்தும் மருந்தும் உளதோ ? உண்டாயின் தெரிவிக்க வேண்டிக் கொண்டதாகும். இப்பாடல்.
மருத்துவோனே மருத்துவோனே - என இருமுறை அடுக்கியது, இன்றியமையாத் தேவையையும், மருத்துவரின் பெருமையையும் உணர்த்தியது.
திருத்தாக் கொடுநோய் - எவராலும் நீக்கவியலாத கொடிய நோயினால்,
கையிகந்தோரை ;கைவிட்டவர்களை, கைவிடப்படுதல்- நோய் கடுமையானதால் அதை நலமாக்க இயலாமல் நோயாளிகளைக் கைவிட்டு விடுதல்.
கருத்துகத் தணிக்கும் - கருத்து மிகும்படி கவனித்து அந்நோயைத் தணிக்கும்.
மருத்துவோனே என்று மூன்றாம் முறையும் விளித்தது இனி கூறப்போகும் கருத்தையும் கவனிக்கவேண்டும் என்னும் வேண்டுதல் பொருளைக் குறித்தது என்க.
பொறிப்புலன் ஐந்தும் செறித்தவாகி - பொறிகள் மேல் நின்று இயங்கும் ஐந்து புலனறி நிலைகளும் செறிவுடன் இருந்து பழுதின்றி இயங்குவன வாகி,
நெஞ்சு புதைத்து நஞ்சுரை குயில்வார்- நெஞ்சு களனாக நின்று இயங்கும் மனச் சான்றினைப் புதைத்துவிட்டு, வாயில் நஞ்சுபோல் தீமை செய்யும் உரைகளைக் குயில்போல் இனிமையாகக் கூறுவார். குயிலுதல்இனிமையாகப் பேசுதல் புணர்ச்சியில் உகரம் கெட்டது.
அஞ்சு வினைக்கு - மக்கள் அஞ்சத்தக்க செயல்களுக்கு.
உயிர் அஞ்சாது உழல்வோர் - உயிர்க்கு வருந் துன்பத்திற்கு அஞ்சாமல் சுழன்று இயங்குவோர்.
நன்றிகொன்றவர்- செய்த உதவிகளை நினைத்துப் பாராமல் அவற்றைச் செய்தவர்களுக்கே தீங்கு செய்பவர்.
நன்னடைப் போலியர் - புறத்தே நல்ல குணமுள்ளவர்கள்போல் நடந்து அகத்தே வேறுபடும் போலி மாந்தர்கள்.
என்று இவர்க்கு - என்னும்படியான இப்படிப்பட்ட உளநோய் கொண்டவர்களுக்கு
அறிதிகொல் மருந்தே - அறிவாய் கொல் தக்க மருந்தினையே. கொல் அசைநிலை இனி கொல் மருந்தே எனக் கொண்டு, அவ்வாறு