பாவலரேறு பெருஞ்சித்திரனார்
289
மருத்து வோனே! மருத்து வோனே!
திருத்தாக் கொடுநோய்க் கையிகந் தோரைக்
கருத்துகத் தணிக்கும் மருத்து வோனே!
பொறிப்புல னைந்துஞ் செறித்த வாகி
நெஞ்சு புதைத்து நஞ்கரை குயில்வோர்
5
அஞ்சு வினைக்குயிர் அஞ்சா துழல்வோர்
நன்றி கொன்றவர் நன்னடைப் போலியர்
என்றிவர்க் கறிதிகொல் மருந்தே
கன்றிய நெஞ்சோர் களிப்புற வுரைமே!
பொழிப்பு :
மருத்துவோனே! மருத்துவோனே! நலப்படுத்தவியலாத கொடிய நோயினால், பலராலும் கைவிடப்பெற்றவர்களைக் கருத்துடன் (கவனித்துத் தணித்து நலமாக்கும் (ஆற்றல் வாய்ந்த மருத்துவோனே! ஐந்து புலன்சார்த்த பொறிகளும் நல்ல முழுத்திறனுடன் இயங்குகின்ற நிலையில், தம் (உண்மை) நெஞ்சைப் புதைத்துக் கொண்டு, நஞ்சு தோய்ந்த இனிமை உரைகளைப் பேசுவோர், உலகம் அஞ்சுகின்ற செயல்களை அஞ்சாமல் செய்து திரிவோர் செய்த நன்மைகளைக் கொன்றவர்கள், புறத்தே நல்ல நடையினராகிய அகத்துப் போலியர் - என்னும் இவர்களை நலப்படுத்தும் மருந்தினை அறிவாயோ? அறியின், (இவர்களின் கொடிய நிலைகளைக் கண்டு) மனம் நொந்துபோய் இருப்பவர், மகிழ்வெய்தும்படி உரைப்பாயாக.
விரிப்பு:
இப்பாடல் புறத்துறையைச்சார்ந்தது.
உலகியலில், நல்ல உடல் நலன்கள் சார்ந்தவர்களாகி, உள்ளத்தின் நல்லுணர்வுகளைப் புதைத்துக் கொண்டு, நஞ்சுபோலும் தீமை பயக்குகின்ற உரைகளை இனிமையாகப் பேசுவோர்களாலும், மக்கள் அஞ்சுகின்ற கொடிய செயல்களைத் துளியும் அஞ்சாமல் செய்வோர்களாலும் பிறர் செய்த உதவிகளுக்குரிய நன்றியுணர்வு இல்லாதவர்களாலும் வெளியில் நல்ல நடைமுறைகளை உடையவர்களாகி, அகத்தே வேறுபட்ட உணர்வுகளைக் கொண்ட போலி மாந்தர்களாலும் உள்ளம் நொந்து வருந்திய ஒருவர், பிறரால் நலமாக்க முடியாமல் கைவிடப்பட்ட கொடிய
19