பக்கம்:நூறாசிரியம்.pdf/345

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

319

படுகையின்கண்ணே ஏறிச்சென்று

நனைஅடி - நீரில் நனைந்த நிலப்பகுதி, படுகை.

அடர்த்த தண்புல் சில்நிழல் தங்குவது அன்றி - செறிந்த குளிர்ச்சி பொருந்திய பொதும்பரின் சிறுநிழலில் தங்குவதல்லாது

புல் - புல்வளர்ந்த பொதும்பர்

சில் - சிறு சின்மை சிறுமை குறித்து நின்றது.

கரிநிழல் மடங்கல் - யாண்டுமிலானே. கரிந்த பெருமரங்களின் நிழலில் அரிமா தங்காது பரந்த நீர் சூழ் உலகில் எங்கும் இல்லையாதலின்

பொதும்பர் நிழல் சின்னிழல் எனப்பட்டமையால் கரிந்தமரம் மரம் பருமரம் என்பது பெறப்படும். கரிந்த மரத்தின் நிழல் கரி நிழல், மரம் வருவிக்கப்பட்டது.

அரிமா, தண்ணிய புன்னிழல் தங்குதன்றி நிழல்தரமாட்டாத கரிமரக் கானில் படுக்காது என்றமையின் வறியாரேனும் நன்னெஞ்சினாரை நாளுங் காண்பதன்றி குன்று சீர் வைத்த கொடையிலாளரைத் தேடிக் காணமாட்டேம் என்னும் கருத்தை உலகியல் நிகழ்ச்சியால் வலியுறுத்தினார்.

யாம் அரிமாவனையேம் என்றவாறு,

இப்பாடல் பொதுவியல் திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.