பக்கம்:நூறாசிரியம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

நூறாசிரியம்


கரைசிறுமணல் என்பதன்கண் எதுகை நோக்கி வல்லொற்று மிகாதாயிற்று. நீரால் கரைக்கப்படுதலின் இதுவும் வினைத் தொகை எனினுமமையும்.

கரத்தல்- மணலுட் புதைந்து மறைதல்

அலைக்கை அகமும் அன்ன - அலையாகிய கை பிறிதொருகால் மணலை அகழ்ந்து புதையுண்ட கிளிஞ்சிலை வெளிப்படுத்துதல் போல.

அகழுதல்- தோண்டுதல் மணற் செறிவைக் கரைத்து உள்ளிருப்பை வெளிப்படுத்துதலின் அகழுதல் எனப்பட்டது. அவ்வினைக்கேற்ப அலை கையாக உருவகஞ் செய்யப் பெற்றது.

உலைக்கும் நெஞ்சு- உய்வதும் இயல்பே.-ஈண்டுத் துன்பத்துட் புதையுண்டு வருந்தும் உள்ளம் அத்துன்பத்தினின்றும் நீங்கப் பெறுதல் இயல்பேயாம்.

உலைத்தல்- துன்புறுத்தப்படுதல். செயப்பாட்டுவினை செய்வினையாய் நின்றது.

உய்தல் - நீங்குதல்.

இப்பாட்டு பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/356&oldid=1209173" இலிருந்து மீள்விக்கப்பட்டது