பக்கம்:நூறாசிரியம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

341



வெற்றி கொள்வோன் இல்லாதான் எதிரிலி.

இறத்த நீங்கிய இல்லாத

விறலோன் ஆற்றல் மிக்க வீரன்.

மா உடக்கு ஊர்ந்தோன் போல - யானையை அடக்கும் திறமில்லாது யானையேற்றம் மேற்கொண்டு சென்றோனைப் போல.

மா-யானை

உடக்குதல்-செலுத்துதல். மாவுடக்கு என்றது யானை யேற்றத்தை மா வென்பது குதிரையுமாகலின் குதிரையேற்றம் என்னலுமாம். ஆயினும் அஃது ஈண்டைக்குச் சிறவாது யானையேற்றம் ஊர்ந்தோன், யானையேற்றம் மேற்கொண்டோன் என்றவாறு.

யானையை அடக்கமாட்டாதவன் என்பது மேற்பொருளின் கண்நின்ற நாவடக்கில்லோன் என்பதனாற் பெறப்பட்டது.

நாஅடக்கு இல்லோன் - நாவை அடக்க மாட்டாதவன்.

நாவடக்கமாவது செருக்கொடும் வரம்பிகந்தும் பேசாமை,

நவியவும் படுமே- பேச்சின் பயனை இழத்தலோடு வருத்தவும் பெறுவான். வருத்தவும் என்பதன் உம்மையால் பேசுதலாற் பெறத்தக்க பயனை இழத்தல் பெறப்பட்டது.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண் மொழிக்காஞ்சி என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/367&oldid=1209382" இலிருந்து மீள்விக்கப்பட்டது