பக்கம்:நூறாசிரியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

11

உழுதலும், வானவூர்தி மேனிலை நின்று அளப்பற வித்தலும் - முயற்சி அருமை பற்றிக் கூறல் நேர்ந்தது - இல்பொருள் உவமை. பயனுறு உருவகமுமாம். அருமுயற்சியின் விளைவித்தாலும் தாமே நுகர்தல் அருமை என்பது பற்றிக்கொள்ளல், உண்ணல், பொழுது, வாழ்தல் இவற்றிற்கு எல்லையளவு கூற நேர்ந்தது.

எஞ்சியது இன்னவர்க்கு இவ்வளவு எனும் முன் துஞ்சல் - எஞ்சிய ஈட்டத்தைத் தம் பிறங்கடைகளுக்கு உரிமையாக்கு முன் தாம் இறந்து படல்.

இறப்பு நம் வினைப்பாடு முடியுமுன்னரே வந்து பற்றும் என்னும் உறுதி நோக்கிச் சொன்னது.

இருக்குநாள் இருக்க - நாம் வாழும் நாளின் வரலாறு பின்னோரால் மறந்து படாமல் நிலைத்து இருக்க இப்பாட்டு வாழ்வு நிலையாமையையும் அறத்தின் நிலைப்பாட்டையும் சுட்டி, ஈதலறத்தை வலியுறுத்தி நிற்கும், நேரிசை ஆசிரியப்பாவாம்.

இதுவும் பொதுவியல் என் திணையும், பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/37&oldid=1221603" இலிருந்து மீள்விக்கப்பட்டது