பக்கம்:நூறாசிரியம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

நூறாசிரியம்


அஃறிணை உயிரிகளெல்லாம் மாந்தர்க்கு உதவியாகச் செயற்படுதலும் பயன்தருதலும் வெளிப்படை

இருகை ..... இருகால் ... உற்றவரெல்லாம். இரு கையும் இரு காலும் இரு கண்ணும் இரு செவியும் ஒரு வாயும் ஒரு வயிறும் உற்றவரான மாந்தரெல்லாம்.

அஃறிணை உயிரிகள் பற்பலவும் கையற்றனவாகவும், ஒருகை உடையனவாகவும், கையே காலாகக் கொள்வனவாகவும், நாற்காலும், அறுகாலும், எண்காலும் பல காலும் உடையனவாகவும் காலில்லாதன வாகவும்

வேறு வேறு உருவும் வேறு வேறு இயற்கையும்

நூறு நூறு ஆயிரம் இயல்பினவாக இருத்தலின் மாந்தரை இவ்வாறு சுட்டினார் எனக் கொள்க!

தாம் தாம் தேடலும் தாம் தமை. இயற்கை யாதலின் - தத்தமக்குத் தேவையானவற்றைத் தாந்தாமே தேடிக் கொள்ளுதலும் தாமே தம்மைக் காத்துக் கொள்ளுதலும் நீரால் ஏந்தப் பெற்ற இவ்வுலகத்தின் இயற்கையாக இருத்தலினால்,

உலகம் நீரால் சூழப்பெற்றிருப்பது அது நீரில் மிதப்பதுபோல் காட்சியளித்தலின் ஏந்து நீர் உலகம் என்றார். நீரை ஏந்தியுள்ள உலகம் எனினுமாம்.

உழையாது உண்மர் - உழைக்காமலே வாளா இருந்து உண்போர்.

உருக்குறைந்து இரந்து பிழைப்போர் தம்மின் - தம் உருவம் கூனிக்குறுகி இரந்து உயிர் வாழ்வோரினும்,

உருக்குறைதலாவது மானமின்றி மற்றையோரிடத்து உடல்கூனிக் குறுகி நிற்றல். பிழைப்போர் - உயிர் வாழ்வோர்.

பிழைப்பு ஆர்வார் இழிவான பிழைப்பில் நிறைவோர் ஆவர்.

ஆர்தல் நிறைதல்

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருள்மொழிக் காஞ்சி எனும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/408&oldid=1211228" இலிருந்து மீள்விக்கப்பட்டது