பக்கம்:நூறாசிரியம்.pdf/458

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

◯ .....
உயர்செந் தமிழ்க்கே உறநின் றாரை
வெய்வேட் டெஃகம் விதிர்ப்பறத் தாங்கிக்
கொய்துயிர் துணித்தது கொலையோன் கோலே!
புன்றலைச் சிறாஅர் செந்நீர் ஆடியோன்
முந்நிற நெடுங்கொடி முன்றிலும் சிதைக!
அன்னோன் தாங்கிய அரசுஞ் சிதைக!
முற்றா இளவுயிர் தமிழ்க்கெனப் போக்கி
வற்றா நெடும்புகழ் வழிவழிக் கொண்ட
இளையோர் காத்த எந்தமிழ்
கிளையுறப் பொலிக குலைவிலா தினியே!

(நூறாசிரியம் 51)
 

◯ .....
குலக்கோ டரிந்து சமயக்கா லறத்துணித்துக்
கலக்குறு கொள்கைக் கடவுண் மறுத்தே
யாரும் யாவும் யாண்டுந் துய்மெனப்
புதுமை பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும்
அரியா ராகலி னவரே
பெரியா ரென்னும் பெயரி யோரே!

(நூறாசிரியம் 24)
 

◯ .....
யாண்டவ னாயினும் மாண்டுப் பீடொடு
வேண்டுவ சுரக்கும் வியன்றமிழ்க் கல்வி
துறையறப் போகித் துணிந்து குறையற . . .
குணங்குயர் காட்சி வணங்குறு வாழ்வின்
சான்றோர்க் கினித்த சொல்லி னானை
ஈன்றோர் தவிர்க்கினும் வேண்டுமென் நெஞ்சே!

(நூறாசிரியம் 71)
 

தென்மொழி நூல் வெளியீட்டு விற்பனையகம்,
5, அருணாசலத் தெரு, சென்னை - 600 005.