பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 களோடு வண்டி அந்தந்த ஊர்க்ட்குச் செல்லவேண்டும். இச்சுற்றும் நூலகத்தோடு நூலகப்பயிற்சி பெற்ற அலுவ லர் ஒருவிரும் செல்லவேண்டும். இது மூலைமுடுக்குகளில், தொலைவான ஊர்களில் உள்ள மக்களும் அறிவுரையும் துணையும் பெறுவதற்கு வாய்ப்பளிக்கும். சமூகத் தேவை களைச் சரியாக உணர்ந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுங்காக வும் முறையாகவும் நூல்களைத்தருவதற்குரியன மாவட்டத் தலைமை நூலகங்கள். எனவே இவற்றில் எல்லா நூல் களும் செய்தித்தாள்களும் வைத்திருக்கப்படவேண்டும். மேலும் இவற்ருேடு திரைப்படங்கள், இசைத்தட்டுகள், வானெலிப் பெட்டிகள் மற்றும் இவை போன்ற பிறவும் இருக்கவேண்டும். பரந்த அளவில் மக்களுடைய அறிவு, கலைப்பண்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வாய்ப் புக்களை இவை தரமுடியும். இவற்ருல் கல்லாதோரும் நூலகத்தின் பயனைப்பெறலாம்; கற்ருேரும் லேம்ெபக யோடு அறிவை மேலும் பெறலாம். படிப்போர் கூட்டத்திற்கு ஏற்ப நூல்களைத் தருதல் பொது நூலகங்களின் முதல் வேலையாகும்.ஒவ்வொன்ருய் எழுத்துக் கூட்டியோ வேறு வழிகளிலோ தமது அன்ருட வாழ்க்கையில் பழக்கப்பட்ட நூறு அல்லது நூற்றுஇருபது பொதுச்சொற்களை எழுதவும் படிக்கவும் கூடிய அரை குறைக்கல்வி அறிவுடையோருக்கு ஏற்பவும் பல நூல் களும் செய்தி ஏடுகளும் உள்ளன. முதியோர்க்கு உதவும் இந்நூல்கள், செய்தித்தாள்கள் முதலியன, அளவில் சிறியனவாகவும், எழுத்துக்கள் பெரியனவாகவும் இருக்க வேண்டும். இத்தகைய நூல்களை முதியோர் தம் சட்டைப் பையில்வைத்துக்கொள்ளலாம்; சிறிது நேரம் கிடைத் தாலும் பொழுதை வீணுக்காது அவற்றைப் பையிலிருந்து . டுத்துப் படித்துக்கொள்ளலாம்.