பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஒன்றில் வண்டிக்குள்ளேயே நூலடுக்குகள் இருக் கும். வேண்டும் நூலை உள்ளே சென்று மக்கள் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டாவதில் --- நூலடுக்குகள் வெளிப்புறத்தில் உள. இவற்றை மூடியிருக்கும் இரும்புக் கதவுகளை வேண்டுமிடத்தில் மேலே தூக்கி நிறுத்திவிடுவர். வண்டி யைச் சுற்றி நின்று மக்கள் வேண்டியதை எடுத்துக் கொள்வர். இது வெளி அமைப்பு ஆகும். முன்னதைப் பிரித்தானிய நூலகங்கள் கைக் கொண்டுள்ளன. பின் னதை-அதிகப்பேர்படிக்கவும் எடுக்கவும் வாய்ப்புள்ளதை -அமெரிக்கர் வைத்திருக்கின்றனர். == ங்_ تی கால் நிலை எப்போதும் ஒரே மாதிரியாய் இருப்ப தில்லை. மழையாலுைம் வெய்யிலானலும் மக்கள் உள்ளே வந்து நூலை எடுப்பதற்கும், அதிக நூற்களை வைத்துக் கொள்வதற்கும் உள் அமைப்பே சிறந்தது. உள் அமைப்புள்ள வண்டிகளில் நுழைவு வழி, வண்டி யின் முற்பகுதியில் இருக்கவேண்டும். , கதவுகள் கனமில்லாமல் இருக்கவேண்டும். இதல்ை இரு பயன்கள் உள. விரைந்து சாத்தவும், கடுங் காற்றி லும் எளிதில் கையாளவும் முடியும். வண்டி ஒட்டியின் இருக்கையருகில் ஒரு பகுதி நூல் வழங்கும் பகுதியாக எல்லா வசதிகளுடனும் அமைதல் நலம். வண்டி ஓடுகை யில் உள்ளே தள்ளி விடுவதாயும் நின்றதும் நூல் வழங் குபவர் தன்னருகே இழுத்துக் கொள்வதாயும் அமைந்த ஒரு மேசையும் வேண்டும். உள்ளே தள்ளாவிடின் வண்டியின் மேற்றளத்தில் பொருத்திக்கொள்ளக்கூடிய தாக அம்மேசை இருக்கலாம். ஒத்த அளவுகளில் நூல டுக்குகள் அமையவேண்டும். பெருநூற்களையும் வைப்ப தற்காகச் சிலவற்றின் அளவு பெரிதாய் இருக்கவேண்டும்.