பக்கம்:நூலக ஆட்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொறுப்பும், பயிற்சியும் உள்ளவர்கள் வாங்கும் ஊதிய முறையினை ஒத்தே நூலக ஊதிய முறையும் உள்ளது. நூலகப் பணியிலே ஈடுபட்டிருப்பவரில் திறமை மிக்கவர் முன்னேறுவதற்கு எத்தனையோ வாய்ப்புக்கள் உள்ளன. நூலக உதவியாளரும் காலப்போக்கில் முதலிரு தகுதிகளுக்கு உயர இயலும். பல்கலைக் கழகப் பட்டம் பெற்று நூலகத் துறையிலே பணிபுரிபவர் மிக உயர்ந்த பதவியினை அடையக்கூடும்.

வேறு வேறு வகையான ஆயிரம் நூலகங்கள் இன்றைய இந்தியாவில் உள்ளன. மத்திய, மாவட்ட நூலகங்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்த ஒருசில ஆண்டுகளில் நாடு முழுவதும் பொது நூலகங்களைக் காணலாம். இருபதிற்கு மேற்பட்ட மத்திய நூலகங்களும் (Central), இருநூறு மாவட்ட நூலகங்களும், ஆயிரத்தெண்ணூறு கிளை நூலகங்களும் நாடு முழுதும் அமைக்கப்பட இருக்கின்றன. கல்வியையும் பண்பாட்டையும் இலக்கிய இன்பத்தினையும் எடுத்தியம்பக் கூடிய படக்காட்சிகள் இன்று சில நூலகங்களிலே காட்டப் பெறுகின்றன. பல பள்ளிகளிலும் ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்கு இத்தகைய படக் காட்சிகள் காட்டப்படுகின்றன. இதற்குரிய கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன.

இன்று பொது நூலக இயக்கம் நாடு முழுமையும் ஆதரவினைப் பெற்று வருகின்றது. முப்பதாண்டுகளில் நாடு முழுவதும் நூலகங்கள் திறக்கப்படுவதற்குரிய வழியினை நமது மத்திய அரசியலார் வகுத்துள்ளனர். நூலக விரிவுத் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பொது நூலகங்கள் தோன்றுமென எதிர்பார்க்கப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/18&oldid=1111544" இலிருந்து மீள்விக்கப்பட்டது