பக்கம்:நூலக ஆட்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மிக்க உயர்ந்த பதவிகள் உள்ளன. நூலகத் தலைவர்களுக்கும் உதவியாளர்களுக்கும் உரிய ஊதிய முறைகள் உள்ளன. அவற்றை ஏற்படுத்தியது மத்திய அரசியலாரே.

1. நூலகத் தலைவர் :

முதல் தகுதி - ரூ. 275-25-500-30-800.
இரண்டாவது தகுதி - ரூ. 160-10-350.
மூன்றாவது தகுதி - ரூ. 100-8-140.

2. உதவியாளர் :

1. உதவியாளர் (Assistant) - ரூ. 100-8-140-10-250.
2. இளம் உதவியாளர் (Junior) - ரூ. 80-5-120-8-200-10-220.
3. தொழில் நுணுக்க உதவியாளர் (Technical Assistant)- ரூ. 250-10-300-15-450--

25-500.

4. தொழில் நுணுக்க இளம் உதவியாளர் - ரூ. 160-10-300.


மாதமொன்றிற்கு ரூ. அறுநூறு முதல் ஆயிரம் வரை ஒரு சில முதல் வகுப்புப் பதவிகளுக்குத் தரப்படுகின்றன. தேசீய நூலகத் தலைவர்கள் உயர்ந்த ஊதியம் பெறுகின்றனர். பல்கலைக் கழக நூலகத் தலைவரின் குறைந்த அளவு ஊதியம் ரூ. 200-600 ஆகும்; அதிக அளவு ரூ. 600- 800. துணை நூலகத் தலைவர் ரூ. 150-250 பெறுகிறார். ஒரு சிலர் ரூ. 300-500ம் பெறுகின்றனர். மாநில நூலகங்களிலும், கல்வி நிலைய நூலகங்களிலும் தரும் ஊதிய முறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடுடையதாய் விளங்கலாம். எனினும் பிற அலுவலகங்களிலே ஒத்த நிலையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/17&oldid=1111542" இலிருந்து மீள்விக்கப்பட்டது