பக்கம்:நூலக ஆட்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20. நூலகச் சீட்டு தொலைந்து போகுமானல் உடனே நூலகத் தலைவருக்குத் தெரிவிக்கவேண்டும். எட்டணா செலுத்தித் தொலைந்துபோன சீட்டுக்குப் பதிலாக வேருெரு சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

21. நூலகத்திலிருந்து எடுத்த நூல்களைப் பிறருக்கு இரவல் தரக்கூடாது.

22. செய்தி இதழ்கள், அகராதிகள், வார, மாத வெளியீடுகள், நிகண்டு, நாட்டுப்படங்கள் போன்ற மேற்கோள் நூல்கள் (Reference Books) இரவல் தருதற்கில்லை.

23. மிகுந்த தேவையுள்ள நூல்களைத் தேவையான குறுகிய கால எல்லைக்குள் இல்லத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

24. குறிப்பிட்ட நாளிலே நூலினைத் திருப்பித்தரா விட்டால் ஒவ்வொரு நூலுக்கும் (குறிப்பிட்டநாளுக்கு மேற்பட்ட) நாள் ஒன்றுக்கு ஒரு அணா தண்டமாக வாங்கப்படும். விதி 16 ன் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட தவணைக் காலத்திற்கு மேல் இரவல் காலம் நீடிக்கப்பட மாட்டாது. மேலும் பதினான்கு நாள் தவணைக்குப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

25. இல்லத்திற்கு எடுத்துச் செல்லும் நூல்களைத் திருப்பிக் கொடுக்கும்பொழுது நூல்கள் பழுதுபட்டு இருப்பதாகத் தெரியவந்தால், அந்நூல்களை எடுத்துச் சென்றவர் புது நூல்களை வாங்கித்தரவேண்டும். எனவே நூலெடுத்துச் செல்வோர் எடுத்துச் செல்லும்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/72&oldid=1123203" இலிருந்து மீள்விக்கப்பட்டது