பக்கம்:நூல் நிலையம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

3

தோற்றுவாய் தற்கால நூலகங்கள் எல்லாம் சமூக, பொருளாதார, அரசியல் மாறுதல்களின் பயனாகத் தோன்றியவைகளாகும். தாள் (Paper), அச்சுப் பொறி (Printing machine) இவையிரண்டுமே இன்றைய நூலகக் கட்டிடத்தினைத் தாங்கி நிற்கும் இருபெருந் தூண்களாகும்.

தண்டமிழ் நாட்டில்!

நமது பெட்டகமாகிய, தண்டமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் நூலகம் புதியதன்று. பண்டைத் தமிழகத்தில் பெரும் நூல் நிலையங்களும், தற்காலத்தைப் போன்று நூல் நிலைய முறையும் இருந்ததெனக் கூறலாம். முத்தமிழ் வளர்த்த முச்சங்கங்களைத் தமிழ்நாட்டுப் பெரு நூலகங்கள் என்றே இயம்பலாம். புலவர்களால் இயற்றப்பட்ட நூற்கள் அனைத்தும் இச்சங்கங்களிற்றான் அரங்கேறின. மேலும், அங்கேயே அவர்கள் எழுதிய ஓலைச் சுவடிகள் சேகரித்து வைக்கப்பட்டன. "நூற்களே சாலத் தொகுத்தும்' என்ற நாலடியாரிற் காணப்படும் வரி மேற்கூறிய உண்மையினை உறுதிப்படுத்தும். சிறந்த நூற்கள் “படி” (Copy) எடுக்கப்பட்டுக் கற்றறிந்த சிலரிடத்தும், கோவில்களுக்கும் கொடுக்கப்பட்டன. பெரிய கோவில்களின் திருச்சுற்று மாளிகை படிப்பகமாகப் பண்டைக் காலத்தில் விளங்கியது. கிடைத்தற்கரிய ஓலைச் சுவடிகள் இப்படிப்பகங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. இச்சுவடிகளைப் பழுது பார்த்தும், படியெடுத்தும், பாதுகாத்தும் வந்தவர் 'விரகர்' என அழைக்கப்பட்டனர். சோழர் காலத்தில் இத்தகைய கோவில் நூலகம் 'சரசுவதிப் பண்டாரம்' என அழைக்கப்பட்டது.

தஞ்சைச் சரசுவதி மகால் நூலகம்!

இன்றும் நின்று நிலவும் தமிழ்நாட்டுப் புராதன நூலகம் தஞ்சையில் உள்ள 'சரசுவதி மகால்' நூலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/12&oldid=1412718" இலிருந்து மீள்விக்கப்பட்டது