பக்கம்:நூல் நிலையம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நூல் நிலையம்

மாகும். தஞ்சையை ஆண்ட மகாராட்டிர மன்னன் ‘சரபோசியே இந்நூலகத்தினைத் தோற்றிய தந்தையாகும். மேட்ைடுக் கலைகளிலும் நம் நாட்டுக் கலைகளிலும் சிறந்த பயிற்சி பெற்றிருந்த இம்மன்னன் தன்னைப் போன்று நாட்டு மக்களும் கல்வியால் கலே கலம் பெறு தல் வேண்டும் என்றெண்ணி, சிறந்ததொருநூலகத்தினைத் தொடங்குதற் பொருட்டுக் கி. பி. 1820-லிருந்து 1832 வரை லண்டன், பாரிசு, மியூனிக், லீப்சிக், ஆம்சர் டாம், கோபன் கேகன் முதலிய ஐரோப்பிய நகரங்களி லிருந்து ஏராளமான கலே நாற்களே வரவழைத்தார். இவைகளில், அறிவியல், நில நூல், வரலாறு, அரசியல், போர் முறை, இலக்கியம், இலக்கணம், இசை பற்றிய நூற்கள் ஏழாயிரமாகும். ஐநூறுக்கு மேற்பட்ட வைத்திய நூற்களும், நூற்றுக்கணக்கான காட்டுப் படங் களும், ஆயிரக்கணக்கான உடற்கூற்றுப் படங்களும், வைத்திய மூலிகைகள், செடி, கொடி, பூ, பழம், மரங்கள் இவற்றின் படங்களும் ஐரோப்பிய இசை பற்றிய பல நூற்களும் மேனுட்டு, கம் காட்டு ஒவியங்களும் இங் நூலகத்தில் உள்ளன. இந்தியா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்து இம்மன்னர் பத்தாயிரம் வட நாட்டுச் சுவடிகளைச் சேகரித்தார். இங்குள்ள சுவடிகளின் மொத்த எண்ணிக்கை நாற்பதாயிரம். சென்னை அர சியலார் கொடுக்கும் நன்கொடையினைக் கொண்டு அங்குள்ள சுவடிகளிற் சில நூற்களாக வெளியிடப்படு கின்றன. சென்ற நானுறு வருடங்களாக வளர்ந்து வரும் இந்நூலகம் உண்மையிலேயே தமிழ்நாட்டின் தலைசிறந்த நூற்களஞ்சியமாகும். இக்காலத்தைப் போன்றே மக்கள் இந்நூலகத்தினைத் தொடக்கத்திலிருந்தே பயன்படுத்தி வரு கின்றனர். நூற்களே வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புவோர் சுவடிகளைப் படி எடுக்கலாமே ஒழிய அவை களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/13&oldid=589793" இலிருந்து மீள்விக்கப்பட்டது