பக்கம்:நூல் நிலையம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TO அால் நிலையம்

கி. பி. 18-வது நூற்ருண்டில்:

இங்கிலாந்து நாட்டில் இந் நூற்ருண்டில்தான், அது லகத் துறையில் ஒரு மறு மலர்ச்சி ஏற்பட்டதெனக் கூறலாம். இதற்குக் காரணமாக இருந்தவர்கள் டாக்டர் பிரேயும் (Bray) தாமசுகிர்க்வுட்டுமாகும். (Thomas Kirkwood) இவர்களது சலியாத உழைப்பின் காரண மாய் கிராமிய நூலகங்கள் பல திறக்கப்பட்டன. வில்லியம் ஈவர்ட் (William Ewart) என்பவரது பெரு முயற்சியும் இங்கு பர்ராட்டுதற்குரியதாகும். இவர் "டம்ப்ரய்சு' என்ற பகுதியில் வாழும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளு மன்ற உறுப்பினராவர். இவர் 'பொது நூலகங்கள் மக்களுக்காக மக்களாலேயே நடத்தப் பெறவேண்டும் என்ற கொள்கைக்காகப் பெரிதும் உழைத்து வெற்றியும் கண்டவராவார். மக்களுக்காக இந் நாற்ருண்டில் தொடங் கப்பெற்ற பொது நூலகங்களின் ஆட்சிப் பொறுப்பினே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிக் குழுவினரே (elected local council) G310,594, roor ig-go, Gorf. Ločič, ளிடமிருந்து பெற்ற பொதுவரிப் பணத்தில் ஒரு பகுதி அநூலகச் செலவிற்கு ஒதுக்கப்பட்டது. இதுபற்றிய வரவு செலவுத் திட்டம் ஊராட்சிக் குழுவினரது முடிவுகளைப் பொறுத்ததாகும். நூலகக் கட்டணம் ஏதுமின்றி மக்கள் இக்நாலகங்களைப் பயன் படுத்தும் பேற்றினைப் பெற்றுப் பேரின்பமடைந்தனர். இதற்குப் பின்னரே இவ்வடிப் படையில், நாலகத்துறையில் சிறந்ததொரு வளர்ச்சியினைக் காணுகின்ருேம்.

கி. பி. 19-வது நூற்ருண்டில்:

தேர்ந்தெடுக்கப்பட்ட நூலகக் குழுவினரால் (Select committee) பொது நூலகங்களைப் பற்றிய அறிக்கை ஒன்று கி. பி. 1849ல் வெளியிடப்பட்டது. வில்லியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/19&oldid=589799" இலிருந்து மீள்விக்கப்பட்டது