பக்கம்:நூல் நிலையம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 17

யும், இன்ன பிற பணிகளைச் செய்தும், மக்களை .flifT ©Ꮼé மனப்பான்மை உள்ளவர்களாய் மாற்றியமைத்து, பொது மக்கள் வாழ்விலே-பொது நூலகத் துறையிலே-ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என்பது எவரும் மறுக்க முடியாத-மறக்கமுடியாத மாபெரும் உண்மையாகும். இங்கிலாந்து நாட்டு மக்களில் மொத்த மக்கள் தொகையில் கால் பாகத்திற்கு மேற்பட்டவர்கள் இன்று பொது நூலகங்களை ஒழுங்காகப் பயன்படுத்துகின்றனர். அண் மையில் தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி 30 கோடி மக்கள் இப்பொது நூலகங்களால் பயன்பெறு கின்றனர். 23,000 இடங்களில் புத்தகங்கள் வழங்கப் படுகின்றன.

ஒவ்வொரு நூலகத்திலும் பல பகுதிகள் பாங்குடன் விளங்குகின்றன. உடன் உதவும் நூற்பகுதி (Reference section) ஒன்றுதான் அனைவராலும் விரும்பப்படும் தலே சிறந்த பகுதியாகும். மழலைமொழி பேசும் குழங்தை கட்கும், படிக்கச் செல்லும் பள்ளிச்சிருர்க்கும், மருத்துவக் கூடத்தில் உள்ளவர்கட்கும், சிறைக் கூடத்திற் சிக்கிய வர்கட்கும், ஆண்டில் முதிர்ந்தவர்கட்கும் இப் பொது நூலகங்கள் புத்தகங்களே அனுப்பி அவர்கட்குப் புத்துயிர் அளிக்கின்றன. மேலும் நூலகங்களில் அடிக்கடி சொற் பொழிவுகளும், சொற்போர்களும் கடத்தப்படுகின்றன. இசையின் இனிமையினைப் பருக விரும்புவோர் நூலகங் களில் இன்னிசை கேட்டு மகிழலாம். புத்தகங்களைப் போன்று நூலகங்களில் வாங்கி வைக்கப்பட்டிருக்கும் இசைத் தட்டுக்களே எடுத்துச் சென்று வரலாம். இடை யிடையே செய்திப் படங்கள் சிங்தை களிக்கக் காட்ட, பெறும். மேலும் அடிக்கடி பொருட்காட்சிகள் பல அநூலகத் துறையினரால் கடத்தப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/26&oldid=589806" இலிருந்து மீள்விக்கப்பட்டது