பக்கம்:நூல் நிலையம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்காவில்

நூலகம ஒரு உயிருள்ள பொருள்

அவனி புகழ் அமெரிக்க காடுதான் இன்று நூலகத் துறையில் உலகிலேயே உயர்ந்து விளங்குகின்றது. நாட்டின் கலைச் செல்வங்கள் அனைத்தையும் கொண்டிலங் கும் கருவூலங்களாகிய நூலகங்களே அமெரிக்க காட்டு மக்கள் தங்கள் கண்கள் போன்று கருதுகின்றனர். தங்கள் காட்டில் தோன்றிய அறிஞர், கலைஞராகிய பெரு மக்களுடன், அவர்களது நூற்களின் வாயிலாக நூலகங் களில் உறவாட முடிவதால் நூலகத்தினையும் அவர்கள் உயிருள்ள-உயர்ந்த ஒரு பொருளாகவே கருதுகின்றனர். கருதுவதோடமையாது அவைகளைப் பற்றி எண்ணு இன்றனர்; அவைகளின் உயர்வினைப்பற்றி உண்மையாகவே உள்ளுகின்றனர்; அவைகளின் வளர்ச்சிக்காக, வாழ் விற்காகப் போராடவும் செய்கின்றனர்.

அமெரிக்கக் குடியரசின் சிறப்பியல்புகளை-பண்பு நலன்களை இப்பாரிலுள்ளார்க்குப் பளிங்குபோலப் பளிச் சென எடுத்துக் காட்டும் கண்ணுடிகளே நூலகங்கள் என்பது அங் நுண்ணறிவாளர்களது கருத்து. கற்கண்டி னுமினிய கதைகள் படித்துக் களிப்படைய விரும்பும் கள்ளமில்லா உள்ளமுடைய இளஞ்சிருர், சிறுமியர், சொற்போரில் வெற்றிபெற விளையும் மாண்பு மிக்க மான வர்கள், படித்துப் பட்டம் பெற்ற பின்னர் வாழ்க்கைக் கடலில் ந்ேதிக் கரையேற விரும்பும் கட்டிளமையுடைய வர்கள், வைத்தியத் துறையில் வையம் போற்ற வாழ எண்ணும் வைத்தியர்கள், தொழில் நுணுக்கங்களே எல் லாம் துல்லியமாக அறிந்து தொழில் நடத்தத் துடிக்கும் தொழில் அதிபர்கள்-இவர்களனைவருக்கும் வேண்டியதை வேண்டி யாங்கு நல்கி நலம்பெறச் செய்யும் நூலகங்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/27&oldid=589807" இலிருந்து மீள்விக்கப்பட்டது