பக்கம்:நூல் நிலையம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நூல் நிலையம்

இக்காட்டுச் சிறந்த நூலகமாகக் கருதப்படுகின்றது. கி. பி. 1919ல் நூலக வளர்ச்சியின் பொருட்டு ஒரு (3(Աք ஒன்று நியமிக்கப்பட்டது. இந்நாட்டில், 100க்கு மேற்பட்ட விஞ்ஞான நூலகங்கள் விளங்குகின்றன.

உருசிய நூலகங்கள்:

"மக்களது அறியாமையினேப் போக்குவன நூலகங் களே' என்று ஆணித்தரமாக அறையும் உருசிய காட்டு மக்கள். நூலகங்களைப் பெரிதும் போற்றுகின்றன. இங் காட்டுப் புராதன நூலகம், லெனின் கிராடில், 200 ஆண்டு களுக்கு முன்னரே தொடங்கப்பட்டது. o

இன்று சிறந்து விளங்கும் நூலகங்கள் மாஸ்கோவி' லிருக்கும் லெனின் நூலகமும் லெனின் கிராடிலிருக்கும் அர சாங்கப் பொது நூலகமும் ஆகும். அரசியலார் நூலகவளர்ச் சிக்காகப் பொருளை அள்ளி அள்ளி வழங்குவதால், இன்று இந்நாட்டில் 1500க்கு மேற்பட்ட பொது நூலகங்களும் 5500க்கு மேற்பட்ட சுற்றும் நூலகங்களும் உள்ளன. லெனின் கிராடில் நூலகப் பள்ளி ஒன்று தொடங்கப் பட்டது. இக்காட்டு முக்கியமான நூலகச் சங்கத்தின் பெயர் “நூலகத் துறை ஆய்வுக் கூடமாகும். இங்கு காலகத் துறை பற்றிய ஆராய்ச்சிகளை மாணவர்கள் கடத்துகின்றனர். மேலும், இதனுடன், ஒரு நூலகப் பள்ளியும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி பலருக்குச் சிறந்த பயிற்சி அளிக்கின்றது. அரசியலார் நூலகங்களை யும், அரசியல் பிரச்சாரத்திற்குப் பெரிதும் பயன் படுத்து கின்றனர்.

சுவீடன் நூலகங்கள்:

இக்காட்டு நூலக வரலாற்றின் தொடக்கம் பதினேழா

வது நாற்ருண்டின் இறுதியிலாகும். இந்நாட்டில் 3000க்கு மேற்பட்ட பொது நூலகங்கள் திறக்கப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/39&oldid=589819" இலிருந்து மீள்விக்கப்பட்டது