பக்கம்:நூல் நிலையம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 31.

"ஸ்டாக்கோம்” நகரிலிருக்கும் 'ராயல்' நூலகமும் உப்சாலா பல்கலைக்கழக நூலகமும் லண்ட் பல்கலைக்கழக நூலக மும் குறிப்பிடத் தகுந்தவைகளாகும்.

சப்பானிய நூலகங்கள்:

இந்நாட்டு முதல் நூலகத்தைத் தொடங்கியவர் கோனின் பேரரசனது அரசியல் அதிகாரிகளில் ஒருவராவர் இதன் காலம் கி. பி. 775 ஆகும்.

நூலக இயக்கமானது இக்காட்டில் கி. பி. 1872ல் தொடங்கப்பட் -து. கல்வி இலாகாவினரால் 'இம்பீரியல்’ நூலகமொன்று திறக்கப்பட்டது. எட்டு லட்சம் நாற்கள் இங்கு இடம் பெற்றன. 1881, 1899-ஆம் ஆண்டுகளில் பொது நூலகங்கள் திறத்தற் பொருட்டு நூலகச் சட்டங் கள் கொண்டுவரப்பட்டன. இச்சட்டங்கள், ஊராட்சிக் குழுவினருக்கு, நூலகங்கள் திறத்தற்குரிய வாய்ப்பினே வழங்கின. தனிப்பட்டவர்களுக்கும் ஆதரவளித்தன. காள டைவில் இச் சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டன. இக் நாட்டில் 1618 பொது.நூ லகங்கள் திறக்கப்பட்டன.அவை களில் 1400 நூலகங்கள், தனிப்பட்டவர்களால், பொது மக்களுக்காக கடத்தப்படுகின்றன. மூன்று நூலகங்கள் தான் அரசினரால் நடத்தப்படுகின்றன. ஏனையன ஊராட் சிக் குழுவினரால் (Local bodies) கடத்தப்படுகின்றன. ஒசாக்காவில் இருக்கும் நூலகமே மாகாண நூலகங்களில் தலைமை வாய்ந்ததாகும். இந்நூலகத்தில் ஒன்றரை லட் சத்திற்கு மேற்பட்ட நூற்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் டோக்கியோ நகர்மன்ற கிபியா நூலகமும், நான்கி பன்கோ நூலகமும், டோக்கியோவிலிருக்கும், ஒரியண்டல் நூலக மும், ஒகாசி நூலகமும், ஒசாக்காவிலிருக்கும் ஒகாரா சமூக இயல் ஆய்வுக்கூட நூலகமும், காகானேசிம்ம நூலக மும், ஒசாக்கா நூலகமும், சோகாடோ பன்கோ நூலகமும் பியூசியாமா தொழிற்சாலை நூலகமும், குறிப்பிடத் தகுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/40&oldid=589820" இலிருந்து மீள்விக்கப்பட்டது