பக்கம்:நூல் நிலையம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நூல் நிலையம்

தவைகளாகும். இவைகள் தவிர, கியோடோ இம்பீரியல் நூலகமும், ஆசியச் சமூகத்தினரால் கடத்தப்பெறும் நூலகமும் முக்கியமான நூலகங்களாகும்; அடிக்கடி ஏற்படும் கில அதிர்ச்சியினல், சில நூலகங்கள் அழிந்தன. யாமுச்சி, நாகோயா, டைரன் முதலிய இடங்களிலுள்ள நூலகங்களும் சிறப்பு வாய்ந்தனவாகும். கி. பி. 1928ல் தரப்பட்டிருக்கும் புள்ளி விவரத்தின்படி, இந் நாட்டுக் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி நூலகங்களின் எண்ணிக்கை 267 ஆகும்.

கியோடோ இம்பீரியல் நூலகத்தில் எட்டு லட்சத் திற்கு மேற்பட்ட நூற்கள் சேகரிக்கப்பட்டன. நூலகத் தார்கள் யாவரும், ஒரு நூலகச் சங்கத்தினேத் தொடங்கி உள்ளனர். இச்சங்கம் மாநாடுகள் பல கூட்டியும், நூலக சம்பந்தமான நூற்களே வெளியிட்டும், நூலக வளர்ச்சிக் குப் பாடுபடுகின்றது. அரசினராலும், தனிப்பட்டவர் களாலும் கடத்தப்பெறும் சில பள்ளிகளில், நூலகப் பயிற்சியும் தரப்படுகின்றது.

சீனுவில்:

நூலக இயக்கமானது இக்காட்டில் கி. பி. 1915ல் தொடங்கப் பெறுகின்றது. நாக்கிங்கில் தேசிய அரசாங் கம் செயலாற்ற முற்பட்டபொழுது, நூலக வளர்ச்சியின் பொருட்டு கி. பி. 1927ல், 15 விதிகளடங்கிய, நூலகச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 879 பொது நூலகங்கள் திறக்கப்பட்டன. பீப்பிங்கிலிருக்கும் சீன தேசிய நூலக மும், மெட்ரோபாலிடன் நூலகமும் தலைமை வாய்ந்த பொது நூலகங்களாகும். 15 பல்கலைக்கழக நூலகங்கள் நிறுவப்பட்டன. அவைகளில், காகிங்கிலிருக்கும், தேசிய மத்திய பல்கலைக்கழக நூலகமும், பீப்பிங்கிலிருக்கும் ஐசிங்கூ பல்கலைக்கழக நூலகமும், டியென்ட்சின், நான்கை பல்கலைக்கழக நூலகமும் சீரும் சிறப்புமாகச் செயலாற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/41&oldid=589821" இலிருந்து மீள்விக்கப்பட்டது