பக்கம்:நூல் நிலையம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

நூல் நிலையம் இல்லாத ஊரின் அழகும் பாழ், அறிவும் பாழ் என்ற நிலை இன்று ஏற்பட்டு விட்டது. அச்சுப் பொறியின் வளர்ச்சியால் நூல்களின் தொகையும் பெருகியது : பயனும் பெருகியது ; ஆகவே நூல் நிலையம் ஆங்காங்கே ஏற்பட்டு வளர்தல் ஓர் இயக்கமாகவே செழித்து விட்டது. பொது மக்களின் நல் வாழ்க்கைக்கு உரிய சமூகத் தொண்டுகளில் நூல் நிலையமும் சிறப்பிடம் பெற்றுள்ளது.

இவ்வாறு காலப்போக்கில் வளர்ந்துள்ள இப் புதுநலன் அனைவர்க்கும் உரியதாக வேண்டுமாயின், உலகில் முற்போக்கு அடைந்துள்ள நாடுகளில் நூல் நிலையம் எவ்வாறு அமைந்து பயன்படுகிறது என்பதை நன்கு அறிதல் வேண்டும். நம் நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைக்கும் மற்ற வாய்ப்புக்கட்கும் ஏற்றவாறு எவ்வெவ்வாறு இங்கு அமைத்தல் வேண்டும் என்றும் அறிதல் கடமையாகும். ஆகவே, நூல் நிலையத்தைப் பற்றிய ஆராய்ச்சியும் விளக்கமும் தேவையாகின்றன. ஆங்கிலம் முதலிய மொழிகளில் இத்துறையில் எழுந்துள்ள நூல்கள் பல உள்ளன. தமிழில் விளக்கமாகவும் தெளிவாகவும் நூல் இல்லாதிருந்த குறை இப்போது தீர்கின்றது திருவாளர் அ. திருமலை முத்துசாமி, பி.ஏ., ஆனர்ஸ் பி.டி. நூல் நிலையத் துறையில் கற்பன கற்று, மாவட்ட நூல் நிலைய அலுவலராகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/6&oldid=1031325" இலிருந்து மீள்விக்கப்பட்டது