பக்கம்:நூல் நிலையம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

கல்லூரி நூல் நிலையப் பொறுப்பினராகவும் இருந்து நல்ல அனுபவமும் பெற்று, இந் நூலை இயற்றியிருப்பது போற்றத் தக்க தொண்டு ஆகும். நூல் நிலை ய த் தி ன் தொடக்கம் முதல் இன்றைய வளர்ச்சி வரை, யில் முறைப்படுத்தி எழுதியதோடு, அந்தந்த நாடுகளில் நூல் நிலைய அமைப்பில் உள்ள சிறப்பியல்புகளையும் விளக்கியுள்ளார். உலக நூல் நிலையங்களை அளந்து கூறும் பரப்பிற்கு இடையே தமிழ் நாட்டு நூல் நிலையங்களும் தக்க இடம்பெற்று ஆராயப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப நூல் நிலையங்களைப் போற்றும் முறைகளும் ஆங்காங்கே எடுத்துக் கூறப்படுகின்றன. \

ஆசிரியரின் முயற்சி காலத்திற்கு ஏற்ற நல்ல தொண்டு என்பதில் ஐயம் இல்லை. தமிழகம் இதனை வரவேற்பதோடு, மேலும் இத்துறையில் பல பணிகளை எதிர்பார்க்கும் என நம்புகின்றேன்.

மு. வரதராசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/7&oldid=589787" இலிருந்து மீள்விக்கப்பட்டது