பக்கம்:நூல் நிலையம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை

'பேசுவதில் பயனில்லே, ஏதாவது எழுது'-இப்

பொன் மொழியினைக் கூறிய பெரியார்கள் இருவர். ஒருவர் எனது பேராசிரியர் டாக்டர். மு. வரதராசனுர். மற்ருெருவர் எனது நண்பரும், திருவனந்தபுரம் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியருமாகிய திரு. வி. ஐ. சுப்பிர மணியம் ஆகும். இவ்விரு பெரியார்களும் என்னைக் காணும், தோறெல்லாம் ஏதாவது எழுதியைா அல்லது எழுது கின்ருயா?' என்று கேட்கவே, எனக்கும் ஏதாவது ஒன்றினை எழுதியாக வேண்டும் என்ற எண்ணம் எழுங் தது. அந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவானதே இச் சிறு நூல்.

'பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்'

என்ற பாரதியின கனவை நனவாக்க, இன்று எத்தனையோ தமிழ்ப்பெரு மக்கள் எண்ணிறந்த நூற்களை எழுதி வருகின்றனர். அத்தகைய வரிசையில் ஒன்ருக என்னுடைய படைப்பினைத் தமிழ் நாடு ஏற்றுக் கொள்ளும் என நம்புகின்றேன்,

பிரசுரத்தாருக்கும், உடன் உழைத்த நண்பர்கட்கும், முன்னுரை வழங்கியுள்ள எனது பேராசிரியர்க்கும் என் உளம் நிறைந்த நன்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/8&oldid=589788" இலிருந்து மீள்விக்கப்பட்டது