பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

நெஞ்சக்கனல்


சாதாரணமாகச் செய்து விடுவது போல் நாட்டியம் முடிந்ததும் ஒரு சம்பவம் நடந்தது. டெல்லி மந்திரியைச் சந்திப்பதற்காக மாயா அவசர அவசரமாக மேக்–அப்பைக் கலைத்துவிட்டு மேடையிலிருந்து வந்தாள். கைகூப்பியவளைக் கமலக்கண்ணன்–டெல்லி மந்திரிக்கு அறிமுகம் செய்திருக்க வேண்டும். கமலக்கண்ணன் தயங்கியபடி சும்மா இருக்கவே மற்றொருபுறம் அமர்ந்திருந்த பிலிம் வர்த்தக சங்கத் தலைவர் அறிமுகப்படுத்தினார். ஆனால் மாயாவோ டெல்லி மந்திரியிடம் பேசிவிட்டுக் கமலக்கண் ணனை விசேஷப் புன்னகைகளோடு அணுகி, “என்ன? பார்த்து ரொம்ப நாளாச்சே?” என்று தமிழில் குழைந்த போது கமலக்கண்ணனுக்கு–ஒன்றுமே பதில் சொல்ல வரவில்லை. அசடு வழியச் சிரித்தார். ஃபிலிம் சங்கத் தலைவருக்கு கமலக்கண்ணனின் நிலை புரிந்தது. ஆனால் டெல்லி மந்திரி ஆங்கிலத்தில் மாயாவிடம் கமலக்கண்ணனைப் பற்றி ஏதோ கூறத் தொடங்கவே, ‘வாட் இஸ் திஸ்...யூ நீட் நாட் டெல் மீ எபெளட் ஹிம், ஐ நோ ஹிம் ஃபுல்லி வெல்...’–என்று மாயாவே உற்சாகமாகப் பதில் கூறினாள். கமலக்கண்ணன் மேலும் அசடு வழிந்தார். மாயாதேவி தன்னை மிக மிகத் தர்மசங்கடமான நிலையில் வைப்பதாகக் கருதி அவள்மேல் கடுங்கோபம் குமுறிப் பொங்கியது அவருள்ளே.

13

ரு வழியாக மத்திய மந்திரி ரமேஷ்சிங்கின் சென்னை விஜயத்தை உடனிருந்து வெற்றிகரமாகச் செய்து வழியனுப்பி வைத்தார் கமலக்கண்ணன். அவரை வழியனுப்பி வைத்துவிட்டு விமானநிலையத்திலிருந்து வீடுதிரும்பியதும் நிம்மதியாகவும், ஒய்வாகவும் இருந்தது. அந்த நேரம் பார்த்து நடிகை மாயாதேவியின் ஃபோன் வந்தது. அவள் என்ன பேச வந்தளோ அதைப் பேசவிடுவதற்கு முன்பே, என்ன இருந்தாலும் அன்னிக்கு பிலிம் சேம்பர்ஸ் பார்ட்டீலே சென்ட்ரல் மினிஸ்டருக்கு முன்னே நீ என்னை அப்பிடித் தர்மசங்கடமான நெலைமைக்கு ஆளாக்கியிருக்கப்-