பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4கடந்த கால் நூற்றாண்டில் நமது நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள எத்தனையோ குழப்பங்களுக்கிடையிலும் நம் மக்களின் மனச்சாட்சி முற்றிலும் மரத்துப்போய் விடவில்லை என்ற உண்மையை இந்நாவல் மிகவும் தெளிவாக விளக்குகிறது.

இனிய காதல் கதைகளைவிட இம்மாதிரிப் பிரச்னைகளை வைத்துக் கதை பின்னுவது கொஞ்சம் சிரமமான காரியமே. அந்தச் சிரமமான காரியத்தைத் திறம்படவும் அழகாகவும்.. செய்து முடித்திருக்கிறார் ஆசிரியர் நா. பார்த்தசாரதி. அவருக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றி உரித்தாகுக.


சென்னை, கண. முத்தையா,

18–5–68. தமிழ்ப் புத்தகாலயம்.