பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

67


6


ரண்டு மூன்று நாட்களில் ‘தினசரிப் பத்திரிகை தொடங்கும் பேச்சு பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம்’– என்று சிந்திக்கிற அளவு வளர்ந்திருந்தது. எல்லாமே ‘கிளப்’பில் இரவு நேரத்துச் சீட்டாட்டத்தின் போது பெருந்தலைகளின் பேச்சில் தான் வளர்ந்திருந்தன.

“புதிதாகத் தொடங்க இருக்கும் தினசரிப் பத்திரிகைக்குப் பொருத்தமானதும் கவர்ச்சி நிறைந்ததுமாகிய பெயர் ஒன்றைத் தெரிந்து எழுதுகிறவர்களுக்கு ரூ. 500 சன்மானம் வழங்கப்படும்” என்று விளம்பரச் செய்யலாம் என யோசனை வழங்கினார் ஒரு நண்பர். அப்போதிருந்த ஒருவித உற்சாகத்தில் எந்த யோசனையைக் கேட்டாலும் அது சிறந்த யோசனைதான் என்பதுபோல் தோன்றியது கமலக்கண்ணனுக்கு.

விருப்பு வெறுப்புக்களின் கடைசி எல்லைவரை போய் மூழ்குகிறவர்கள் எந்த ஒரு பிரச்னையையும் நியாயமாகந் தீர்மானிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள். தின சரிப் பத்திரிகை தொடங்குவது அவசியமா? அவசியமில்லையா? அதற்கு ஒரு பெயர் சூட்டுவதற்கு விளம்பரம் செய்ய வேண்டியது பொருத்தமா? பொருத்தமில்லையா?என்பதைப் போன்றவற்றைத் தீர்மானிக்க முயல்வதில் கமலக்கண்ணனின் நிலைமையும் இப்படித்தான் இருந்தது.

எந்தத் தொழிலைத் தொடங்கவேண்டுமென்று, அவர் நினைத்தாரோ அதைப் பற்றிய அறிவு குறைவாகவும், உற்சாகம் அதிகமாகவும் உள்ளவர்களின் யோசனைகளே அவருக்குக் கிடைத்தன. ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவு குறைவாகவும், உற்சாகம் அதிகமாகவும் உள்ளவர்கள் அதைச் சரிவரக் கணிக்கவே முடியரது–என்ற நியாயத்தை ஒட்டியதாகவே இருந்தன அவர்களுடை ஆழமில்லாத முடிவுகள். உலகத்தைப் பொறுத்தும் உலகத்தை எதிர் பார்த்தும் வாழவேண்டும் என்பதைவிட சோதிடத்தைப் பொறுத்தும் சோதிடத்தில் சொல்லியவற்றை எதிர்பார்த்