பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

நெஞ்சக்கனல்


“படத் தயாரிப்பாளர்களுக்கு நியாயமான வட்டியிலே ஃபைனான்ஷியர்ஸ் ஏற்பாடு பண்ணித்தர்ரதோட–- பப்ளிஸிட்டி இன்சார்ஜ் ஆகவும் இருக்கோம். உங்க கம்பெனி விளம்பரங்களை எல்லாம்கூட எங்க மூலமாகவே செய்யணும்னு ரொம்ப நாளா எங்களுக்கு ஒரு ஆசை இருந்தது ஏன் விளம்பரம் செய்யனும்கிறதைவிட– எதுக்காக விளம்பரம் செய்யணும்கிறதை– எதிர்பார்த்து அதுக்கேற்ற முறையிலே செயல்படற ஒரே ‘ அட்வர்டைவிங் மீடியா’ -- எங்களோடது தான். இதிலே உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லே. எங்களைப் பற்றி தாங்களே ரொம்பவும் சொல்லிக் கொள்ளக்கூடாது பாருங்க...” என்று ஓயாமல் அடுக்கியபின் கடைசியில் உபகார அடக்கமாகவும் போனால் போகிறதென்று ஒரு வார்த்தை சொல்வி முடித்தார் பிரகாசம்.


‘மாயா தேவின்னு ஒரு புது ஹீரோபின் வந்திருக்குப் பாருங்க...இப்பத்தான் எங்க பார்த்தாலும் அதைப் பத்தியே பேச்சாயிருக்குங்களே...? அதை இந்த லயன்‘லே கொண்டாந்து விட்டதே நம்ம பிரகாசம் சார்தான்...’ என்றான் கலைச்செழியன்.


“இந்த ‘லயன்’லேன்னா...எந்த லயன்லே...” என்று கமலக்கண்ணனும் குறும்புத்தனமாகச் சிரித்துவிட்டுக் கேட்டபோது அந்தச்சிரிப்பிலேயே அவரைக் குறிப்பறிந்து விட்டார் பிரகாசம், உடனே மெல்லத் தொற்றினார்.

“மாயாவுக்குக்கூட உங்களைப் போலொத்தவங்களை . அறிமுகப்படுத்திக்கிடணும்னு... ரொம்ப ஆசைதானுங்க.”

“ரியலி–ஷி இஸ் சார்மிங்–-ப்யூட்டிஃபுல்..” என்று கமலக்கண்ணனும் நெகிழ்ந்தார்.


“ ஷி இஸ் வெரி ஈகர் டு ஸூ யூ ஸார்...”

“பார்த்தாப் போச்சு...”

“வீட்டுக்கே அழச்சிட்டு வரட்டுமா......சார்......... இல்லே...?” –

“இங்கேயா...வாணாம்...நான் அப்புறம் சொல்றேனே?”–என்று சிரித்து மழுப்பினார் கமலக்கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/82&oldid=1047792" இலிருந்து மீள்விக்கப்பட்டது