பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

89

டிலுமே.. அதை அவர் இன்று அடைய முடிந்தது. கட்சியில் புதிதாக நுழைந் திருந்தாலும் வசதியுள்ளவர் என்ற காரணத்தால் அவர் சொல்லியதை எல்லோரும் கேட்டார்கள். அதே சமயம் கட்சிக்காக உயிரை விட்டுச் சிறை சென்று, தனி நபர் சத்தியாக்கிரகங்கள் செய்து, அந்நியத் துணி பகிஷ்கரிப்புச் செய்து பாடுபட்ட ஏழைத் தியாகிகள். பலரைக் கட்சி இலட்சியமே செய்யவில்லை. கமலக்கண்ணன் ஒரு நோக்கத்தோடு கட்சியில் தீவிர உறுப்பினரானார். அந்த நோக்கம் நிறைவேறுகிற காலமும் வந்தது. கட்சியின் தீவிர உறுப்பினருக்கான தகுதியாக சட்டத்தில் இருந்தது—‘மதுவிலக்கை ஒப்புக்கொண்டாக வேண்டும்’ என்ற பிரிவு. அந்தப் பிரிவை ஒப்புக்கொண்டு அதன்கீழ்க் கையெழுத்திட்டு உறுப்பினராகியும் கமலக்கண்ணனால் குடிப்பதை நிறுத்த முடியவில்லை.

“கட்சி இலட்சியங்களில் நம்பிக்கை இன்றி ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று அவரை எதிர்த்துக் கேட்கவும் அந்தப் புராதனமான தேசிய இயக்கத்தில் யாரும் துணியவு மில்லை. அந்த நிலை கமலக்கண்ணனுக்கு வசதியை அளித்தது. மெல்ல மெல்லக் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினர்களும், உண்மை ஊழியர்களுமான தியாகிகள் பலர் அவருக்குச் சலாம் போடும் நிலைக்கு ஒடுக்கப்பட்டனர். கட்சி அலைச்சல்களுக்கு கார், கட்சி நிதிக்குப் பணம், கட்சிப் பத்திரிகைகளுக்கு ஆதரவு எல்லாம் அவர் தந்தார். கட்சி தன் இலட்சியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கே விற்று விட்டது. இந்த நிலையைத்தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் திடீரென்று ஒரு சிறு சலசலப்பும் கட்சியில் அவருக்கெதிராக முளைத்தது.

8

மலக்கண்ணனுடைய புதிய தினசரிப் பத்திரிகை தொடங்கப்பட்டுச் சில மாதங்கள் ஆகிவிட்டன. இந்தச் சில மாதங்களில் ‘தினக்குரல்’— எல்லாச் சிற்றுரர்களிலும் பேரூர்களிலும் பரவி விட்டது. சினிமாவில் காட்டப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/91&oldid=1048340" இலிருந்து மீள்விக்கப்பட்டது