பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவித்திட விடுதல் தகுமோ இனியும்? இரவில் நிலவில் இனியநல் லுறவுடன் உரியாள் என்பால் உசாவும்பொழுதும் கண்முன் நின்று களிநடம் புரிகுவை; கண்ணயர் பொழுதுங் கனவிடை வந்து பண்ணுயர் தமிழாற் பாடி எழுப்புவை துயிலை மறந்து தோகை நின்னுடன் மயலுறப் பேசி மகிழ்ந்த நல் லிரவுகள் நினைதொறும் நினைதொறும் இன்பம் நிகழ்த்தும்; அனைய இன்பம் அட, ஓ பெரிதே! ஆடல் பாடல் அரங்கிலும் என்னுடன் கூட வந்து குலவித் திகழ்ந்தனை, ஊடல் சிலகால் உற்றனை யாகிலும் தேடி வந்து பாடி மகிழ்ந்தனை: உயிரில் உணர்வில் பேச்சில் மூச்சில் அயரா தென்னுடன் ஆடிக் களித்தனை: பிரியா தென்னைப் பேணிய காதலி! உரியாய் நின்னை வேண்டுவல் ஒன்று; நரம்பிற் குருதி நடமிடும் வரையிலும் திறம்பா தென்னுடன் திகழுதி நீயே! 6 0 கெஞ்சிற் பூத்தவை