பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைந்தமிழ்க் காதலி க க வாஉல் தவிர்த்து வாழ்வு நல்கும் பாடல் என்னும் பைந்தமிழ்க் காதலி! நின்பாற் கலந்துளம் நெகிழுங் காலை என்மனம் பிறிதொன் றெண்ணுவ தில்லை; முற்படு பொருள்கள் கட்புல னாகா: செப்பிடும் எவர்சொலும் செவிப்புலம் நுழையா; தண்புன லாடுவேன், தையால் வருகுவை: கண்படை கொள்வேன் கனவிடைத் தழுவுவை; உண்ணும் பொழுதும் உவந்துடன் அமர்குவை இனித்தனன் துணையொடு தனித்துவரை யாடினும் கணிச்சுவை இதழ்தரக் கனிந்துவந் தணைகுவை! அனிச்ச மலரடி அணங்கே நின்னால் உறங்கலும், உண்ணலும் மறந்துளன் பலகால் இரங்கும் உளத்தினை இனியை எனினும் பாட்டுல காளும் பைந்தமி ழரசி ஆட்டிப் படைப்பை நீ ஆடுவன் யானே. (11–2–1 1852 கவியரசர் முடியரசன் D 7