பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலுவையைச் சுமந்து பார்த்தேன்: சின்னம்வே றணிந்தோ ரெல்லாம் உலகில்அஞ் ஞானி என்றே உளத்தினிற் கருதிக் கொண்டேன்! தலைதனிற் குல்லா வைத்தேன் மற்றது தரியா ரெல்லாம் நிலவிய சைத்தான் என்றே நெஞ்சினிற் பகைத்து நின்றேன். இனியநன் மக்கட் பண்பை இளகிய அன்பை நீக்கி மனிதரைப் பகைக்கச் செய்யும் மதம்படு சின்னம் விட்டேன்; கனிவுறும் அன்பும் பண்பும் கசடறு நெஞ்சம் வாய்க்கும் தனியொரு வழியைக் கண்டு தளர்விலா தொழுகு கின்றேன். (வேறு) மனத்தினுள் மாசுற மறைபல ஓதி கணத்தினில் ஆத்திகன் ஆவதை விடுத்து நல்லவ னாகி நாத்திகன் என்றொரு சொல்லினைப் பெற யான் குளுரைத் துளனே! (1–6–1981) 14 E கெஞ்சிற். பூத்தவை