பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாத்திகனா? ஆத்திகனா? அன்பும் துயநற் பண்பும் நிறைந்து மன்பதை ஒம்பும் மாபெரும் நோன்பினைப் பற்றிய நெஞ்சிற் பழுது படாவணம் முற்றிய உறுதியில் நிற்றலை விழைவேன்; வஞ்சகம் பொறாமை நெஞ்சறி பொய்ம்மை நஞ்சென வெறுத்து நடக்கும் இயல்பினேன்; மற்றவர்க் குறுகண் மனத்திலும் நினையேன், செற்றமுங் கலாமும் செய்திட விழையேன்; பகுத்துனர் அறிவிற் பற்றுதல் உடையேன்: நகத்தகும் மடமைகள் செகுத்திடும் படையேன்; மதம்எது வாகினும் மனத்தினிற் கொள்ளேன்; அதனதன் சின்னமும் அணிதலும் செய்யேன்: கோவிலுங் குளமுங் குறுகுதல் செய்யேன்; மேவிய பூசனை யாவையும் வேண்டேன்; ஆதலின் நாத்திகன் என்றெனை அனைவரும் ஒதுதல் கேட்டேன்; உளத்தினில் நகைத்தேன்; அன்பையும் பண்பையும் அறவே மறந்து ம் மன்பதை கெடுத்தும் தன்னலம் மிகுத்தும் பழுதுகள் மனத்திற் படர விடுத்தும் கவியரசர் முடியரசன் D 15